கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் – 16.6.2024

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

< அய்தராபாத் – செகந்திராபாத் ஆகிய நகரங்களில் இளைஞர்களிடையே கஞ்சாப் பழக்கம் அதிகமாகி வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் கடின உழைப்பை மறக்க போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் நிலை. இரவில் வழிப்பறி அதிகரிப்பு.
< மகாராட்டிரா சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக மகா விகாஸ் அகாடி கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நேற்று (15.6.2024) மும்பையில் நடைபெற்றது
< மகாராட்டிரா மாநிலத்தில் மோடி பிரச்சாரம் செய்த இடத்தில் எல்லாம் பா.ஜ தோல்வி: நன்றி தெரிவித்து கிண்டல் செய்த சரத்பவார்
< நீட் தேர்வு முறைகேட்டுக்கு தேசிய தேர்வு முகமையே காரணம் – திமுக குற்றச்சாட்டு.

தி இந்து:

< உ.பி.யில் நடைபெற உள்ள 10 சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் சமாஜ்வாதி, காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

< என்.சி.இ.ஆர்.டி. புதிய பாடப்புத்தகத்தில் பாபர் மசூதி என்ற பெயர் நீக்கம். மூன்று டோம் அமைப்பு என மாற்றம். அயோத்தி குறித்த செய்திகள் நீக்கம்.
< அருந்ததி ராய் மீது ‘உபா’ சட்டத்தின் கீழ் வழக்கு தொடர அனுமதி: அதிகார அத்துமீறல் என சரத்பவார் கண்டனம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

< ‘லவ் ஜிஹாத்’ மற்றும் மத மாற்றம் என்று கூறப்படும் வழக்குகளைத் தடுக்கும் நோக்கில், சர்ச்சைக்குரிய நடவடிக்கையில், ராஜஸ்தானில் பாஜக அரசு புதிய சட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. முதலமைச்சர் பஜன் லால் தலைமையில், 2008 ஆம் ஆண்டின் ராஜஸ்தான் மத சுதந்திர மசோதாவை திரும்பப் பெற மாநில அரசு முடிவு செய்துள்ளது.

தி டெலிகிராப்:

< பாஜக அரசின் ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளால் உ.பி.யில் விவசாயிகள் தற் கொலை செய்து கொள்கின்றனர்: அகிலேஷ்

குற்றச்சாட்டு.

< நீட் தேர்வை ரத்து செய்து, மாநிலங்கள் சொந்தமாக நுழைவுத் தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும்: கருநாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார்
< மக்களவைத் தேர்தல் முடிவுகள் பாஜகவின் ஆணவத்தையும் பெருமையையும் தூள் தூளாக்கி விட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் கருத்து.
< இந்தியாவின் 80 சதவீத மருத்துவக் கல்லூரிகள் ஆசிரியர் எண்ணிக்கையில் அல்லது பிற கற்பித்தல் உள் கட்டமைப்பில் குறைவாக உள்ளது, இது குறித்த தகவல் களை ஆர்.டி.அய். மூலம் எழுப்பப்பட்ட கோரிக்கைக்கு, தர முடியாது என தேசிய மருத்துவ ஆணையம் மறுப்பு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

< நீட் தேர்வு தாள்கள் கசிந்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகக் கூறி, உத்தரப் பிரதேசம், மகாரா ட்டிரா மற்றும் பீகார் மாணவர்களை பீகார் காவல் துறை விசாரணைக்கு அழைத்துள்ளது.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *