திராவிடர் கழக மாநில பொறுப்பாளர், தலைமைக் கழக அமைப்பாளர், காப்பாளர்கள், மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, திராவிட மாணவர் கழகப் பொறுப்பாளர்களுக்கு முக்கிய வேண்டுகோள்.
இளைஞர்கள், மாணவர்களை தந்தை பெரியாரின் கொள்கையின்பால் பிடிப்பு உள்ளவர்களாகவும், கொள்கை உறுதியானவர்களாகவும், அறிவியல் மனப்பான்மை உள்ளவர்களாகவும் உருவாக்கிட அன்னை மணியம்மையார் காலத்தில் (1978) தொடங்கப்பட்டு தொடர்ந்து தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை குற்றாலத்தில் தொடர்ந்து 44 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. 2024 ஜூலை – 4, 5, 6, 7 வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் 45-ஆவது ஆண்டாக மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.
தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் கழக முக்கிய பொறுப்பாளர்கள், பேராசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் வகுப்பு எடுக்க உள்ளனர்.
மாவட்டத்திற்கு 5 மாணவர்களுக்கு குறையாமல் பெரியாரியல் பயிற்சி பட்டறைக்கு அனுப்பி வைத்திட கழக பொறுப்பாளர்களை கனிவுடன் வேண்டுகிறோம். நான்கு நாட்களுக்கும் பயிற்சி கட்டணம் மாணவர்களுக்கு – ரூ. 200, பார்வையாளர்களுக்கு ரூ. 1,000 (முன் பதிவு செய்வது அவசியம்)
நன்றி
முன் பதிவு படிவம்
– இரா. ஜெயக்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
(பெரியாரியல் பயிற்சிப்பட்டறை பொறுப்பாளர்)
திராவிடர் கழகம் – (9842598743)