கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
19.11.2023
டெக்கான் கிரானிக்கல்,சென்னை
* ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்கள் சட்டப் பேரவையில் மீண்டும் நிறைவேற்றம்: நேற்று (18.11.2023) நிறைவேற்றப்பட்ட 10 சட்ட மசோதாக்களையும் மாலையில் உடனடியாக ஆளுநர் மாளிகைக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது
தி இந்து
* மசூதி கட்டுவதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த ஹிந்து முன்னேற்றக் கழகத் தலைவர் வழக்குத் தள்ளுபடி. ரூ. 25,000 அபராதம் விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்.
தி டெலிகிராப்
* ராஜஸ்தான் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பொறியாளரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மலிங்காவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுத்துவிட்டது. ஆனால் பாஜக அவருக்கு வாய்ப்பு அளித்துள்ளதற்கு கார்கே கடும் கண்டனம்.
* அதானி குழுமத்தின் நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணையை மீண்டும் தொடங்க இந்திய புலனாய்வாளர்கள் முயற்சி.
டைம்ஸ் ஆப் இந்தியா
* பாஜக மூத்த தலைவர் பி.எஸ்.எடியூரப்பாவின் இளைய மகன் பி.ஒய்.விஜயேந்திராவை கருநாடகா பாஜகவின் தலைவராக நியமனம் செய்தததற்கு பாஜகவில் கடும் எதிர்ப்பு. இது வாரிசு அரசியல் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் விமர்சனம்.
– குடந்தை கருணா