சென்னை, ஆக. 29 – சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று பத்திரி கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சந்திரயான்-3 தனது இலக்கை அடைந்தது இந்திய மக்களுக்கு மகிழ்ச்சியான நாள். இதற்காக பாடுபட்ட அனைத்து விஞ்ஞா னிகளுக்கும் குறிப்பாக தமிழ் நாட்டைச் சார்ந்த விஞ்ஞானிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக நன்றியையும், மகிழ்ச்சி யையும் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு அடிப்படை அமைத்தவர் ஜவஹர்லால் நேரு தான்.
காவிரி நதிநீர் பிரச்சினையில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டு, அவருடைய அரசியல் செல்வாக்கு மற்றும் நீதிமன்றத் தின் மூலமாக சட்ட ரீதியாக ஒரு நாளைக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீரை கருநாடகா திறக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற் படுத்தினார்.
கருநாடகா தண்ணீரை திறந்த உடனே அதற்கு கருநாடகா பா.ஜ.க. மேனாள் முதலமைச்சர்கள் பொம்மையும், எடியூரப் பாவும்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தமிழ்நாடு பா.ஜ.க.வினர் அதற்கு எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்காததன் மூலம் தமிழர் விரோதி என்பதை தமிழ்நாடு பா.ஜ.க. மக்களிடம் தெளிவாக காட்டுகிறது. விசார ணைக்கு உட்படுத்தி இருக்கிறது
சமீபத்தில் நாடாளுமன் றத்தில் சி.ஏ.ஜி. தாக்கல் செய் துள்ள அறிக்கையில், ரூ.7லு லட்சம் கோடி ஊழல் நடை பெற்றுள்ளதாக தெரிவித்து உள்ளது.
ஒரு கிலோ மீட்டர் சாலை போடுவதற்கு ரூ.18 கோடி செலவாகும். ஆனால் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.250 கோடி செலவு செய்துள்ளீர்கள். எப்படி அந்த பணத்தை கொடுத்தார்கள்.
இதற்கு பிரதமர் பதில் சொல்லவில்லை. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
2ஜி ஊழல் என்பது அனு மானமாக சொல்லப்பட்டது. அது பூஜ்ஜியம் இழப்பு என்று கபில்சிபல் தெரிவித்திருந்தார். ஆனால், இன்று ரூ.18 கோடி ஒப்பந்தத்தில் கூறப்பட்டு உள்ளது. அதற்கு ரூ.250 கோடி செலவு செய்து உள்ளீர்கள். எப்படி கருவூலத்தில் பணத்தை கொடுத்தார்கள். உங்கள் துறை அனுமதிக்காத ஒரு தொகையை ஒப்பந்ததாரர்கள் எப்படி பெற முடிந்தது.
இதுதான் குற்றச்சாட்டு. ரூ.7லு லட்சம் முறைகேடு குறித்து சி.ஏ.ஜி. விசாரணைக்கு உட் படுத்தி இருக்கிறது. பரனூர் சுங்கச்சாவடியில் மட்டும் சுமார் ரூ.6.5 கோடி முறைகேடு நடை பெற்றுள்ளது. இந்தியா முழு வதும் உள்ள 600 சுங்கச் சாவடிகளிலும் முறைகேடுகள் நடைபெற்று இருக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கொண்டு வந்துள்ள காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் மனதார பாராட்டுகிறது, வரவேற்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.