சென்னை, ஜூன் 14- மாநிலத்தில் உள்ள 8,500-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களின் முன்னணி அமைப்பாகிய தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம், பன்னாட்டு பிளாஸ்டிக் கண்காட்சியை (IPLAS) 2024 ஜூன் 14 முதல் 17 வரை சென்னை வர்த்தக மய்யத்தில் நடத்துகிறது.
இந்த பன்னாட்டு நிகழ்வை 40,000-க்கும் அதிகமான பார் வையாளர்கள் பார்வையிட்டு பயனடைவார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது. அண்டை மாநிலங்கள் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும், இலங்கை, வியட்நாம், மலேசியா, மியான்மர், கென்யா ஆகிய நாடுகளில் இருந்தும் பார் வையாளர்கள் வரவுள்ளனர்.
முந்தைய ஆண்டுகளைப் போலவே இந்தப் பதிப்பும் வரும் ஆண்டுகளில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிப்பதோடு, இத்துறையின் வளர்ச்சியையும் எளிதாக்கும். இந்தக் கண்காட்சியில் புதிய இயந்திரங்கள் ரூ. 1,000 கோடி வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பிளாஸ்டிக் துறையில் பெரிய தாக்கத்தையும், புதிய வேலை வாய்பையும் உருவாக்கும்.
நுகர்வுக்குப் பின் உருவான நகராட்சிக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட, நீண்ட காலத்துக்கு நீடிக்கக்கூடிய அறைகலன்கள் காட்சிக்கு வைக்கப்படும். பள்ளி / கல்லூரி மாணவர்கள், குடியிருப்பு சங்கங்கள் மற்றும் திடக்கழிவு மேலாண்மையில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் பங் கேற்பதற்கு டாப்மா அழைப்பு விடுத் திருக்கிறது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த நான்கு நாள் கண்காட்சிக்கு கட்டணம் ஏதும் கிடையாது.