பாலக்காடு அருகேயுள்ள கல்பாத்தி என்பது பார்ப்பனர்கள் அதிகம் வசித்த பகுதி. பார்ப்பனர்களின் எதிர்ப்பால் அந்த பகுதி சாலைகளில் ஈழவர்கள் (நாடார்), தாழ்த்தப்பட்டோர் போன்றோர் செல்ல அரசு தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
சுயமரியாதை இயக்கத்துடன் தொடர்பில் இருந்த
ஆர். வீரய்யன் என்ற தாழ்த்தப்பட்ட நியமன உறுப்பினர் சென்னை சட்டமன்றத்தில் இது தொடர்பாக ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். ‘‘ஒடுக்கப்பட்டோர் சாலைகளில் நடப்பதற்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் தடையை நீக்க வேண்டும்’’ என்பது அந்த தீர்மானம்.
நரசிம்மாச்சார்லு என்ற பார்ப்பன உறுப்பினர் அதை கடுமையாக எதிர்த்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் ‘இன்று சாலையில் நடக்க வேண்டும் என்பார்கள். நாளை ஆலயப் பிரவேச உரிமை கேட்பார்கள். பிறகு கலப்பு மணம் வேண்டும் என்பார்கள்!‘‘ என்பது.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலும் இதே கருத்தை வலியுறுத்தி பெரியாரின் நண்பர் எ. ராமச்சந்திரநாயுடு ஒரு தீர்மானத்தை முன்மொழிய பெரியாரும், சிங்காரவேலரும் அதை வழி மொழிந்தார்.
அதனை அப்போது கடுமையாக எதிர்த்துப் பேசியவர் எம்.கே. ஆச்சார்யா என்ற பார்ப்பனர். அவர் தனது உரையில் ‘‘தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று பேசுவது ஒழுங்காகாது. ‘ஸநாதனத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க கூடாது!’’ என்றார்.
இவ்வளவுதான். இதற்கு பெரிய விளக்கம் பொழிப்புரை தேவையில்ைல.
எல்லோருக்கும் எல்லாமும் என்பது திராவிட மாடல்!
தொடாதே எட்டி நில் என்பது ஸநாதனம் தட்ஸ் ஆல்!
– கி.தளபதிராஜ்