வல்லம், ஜூன் 13 வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 2023-இல் பணியாற்றிய முதல்வர் முனைவர் இரா.மல்லிகா அவர்கள் தேசிய அளவிலான சிறந்த பாலிடெக்னிக் முதல்வர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் சிறப்பான செயல்பாடுகளான தொழில்நுட்ப நிகழ்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள் நடத்துவதன் மூலம் மாணவ, மாணவியரின் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை உறுதி செய்து சிறப்பாக செயல்பட்ட வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 2023-ஆம் ஆண்டில் பணியாற்றிய கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.மல்லிகா அவர்கள் “இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழக தேசிய அளவிலான ரெங்கநாதன் பொறியியல் கல்லூரி 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த பாலிடெக்னிக் முதல்வர் விருதுக்கு” (ISTE Ranganathan Engineering College National Award for Best Polytechnic Principal for the year 2023) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புவனேஸ்வரிலுள்ள கிஸ் பல்கலைக்கழகத்தில் (KISS University) 22.06.2024 அன்று நடைபெறும் 53ஆவது இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆண்டு தேசிய பேராசிரியர் ஆண்டு கூட்டத்தில் (ISTE Annual National Faculty Convention) இப்பெருமைமிகு விருது வழங்கப்பட உள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்விருது ரொக்கப்பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.கல்லூரியின் நிறுவனத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் முனைவர் இரா,மல்லிகா அவர்க ளுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரி வித்தார்.