கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
சென்னை, ஜூன் 12- வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம், 6.6.2024 அன்று சென்னை பெரியார் திடல் – அன்னை நாகம்மையார் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு, வடசென்னை மாவட்ட காப்பாளர் கி.இராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் தி.செ.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வடசென்னை மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் த.மரகதமணி, கடவுள் மறுப்பு கூறி னார். கொளத்தூர் ச.இரா சேந்திரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன் கூட் டத்தின் நோக்கம் குறித்துப் பேசினார்.
இக்கூட்டத்தில் மாநில மகளிர் பாசறை செயலா ளர் வழக்குரைஞர் பா. மணியம்மை, தே.செ.கோபால், வழக்குரைஞர் தளபதி பாண்டியன், சோ.சுரேசு, கி.இராமலிங்கம், தி.செ.கணேசன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், செம்பி யம் கழக தலைவர் பா. கோபாலகிருஷ்ணன், அயன்புரம் கழக தலைவர் சு.துரைராசு, கொடுங்கையூர் கழக தலைவர் கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி, ஆவடி மாவட்ட துணைத் தலைவர் வை.கலையரசன், க.கலைமணி, க.செல்லப் பன், மு.பவானி, நா.பார்த் திபன், த.பர்தின், த.மரகத மணி ஆகியோர் ‘விடுதலை’ சந்தாக்களைப் பெறுவது பற்றியும், மாவட்ட கழகப் பணிகள் குறித்தும் பேசினர்.
நிறைவாக கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் உரையாற்றுகையில், ‘விடு தலை’ இல்லையேல் கழகம் இல்லை – ஆகவே ‘விடு தலை’க்கு சந்தாதாரர்களை சேர்ப்பதில் மாவட்ட கழகத் தோழர்கள் வேக மாகப் பணியாற்ற வேண்டு மென்றார்.
மதவெறி ஆதிக்க பா.ஜ.க.வின் தமிழின விரோத செயல்களுக்கு எதிராக மாவட்டக் கழகத் தோழர்கள் கழகப் பணிகள் எழுச்சியோடு நடைபெற பாடுபட வேண்டுமென குறிப்பிட்டார். தற்போது முன் வைக்கப்பட்டுள்ள செயல் திட்டங்கள் நல்ல முறையில் நிறைவேற்றப்பட மாவட்ட கழகத் தோழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணி யாற்றிட வேண்டுமென எடுத்துக் கூறினார்.
கோ.தங்கமணி – தனலட்சுமி இணையர் ஓராண்டு விடுதலை சந் தாவை துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியாரிடம் வழங்கினர்.
பிரின்சு என்னாரெசு பெரியார், பசும்பொன் ஆகியோருக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
வடசென்னை மாவட் டத்தில் கழகக் கொடிக் கம்பங்கள் 100 இடங்களில் அமைப்பதற்கு ஏற்ற இரும்புக் கம்பங்களுக்குரிய ஏற்பாட்டினை தான் செய்து தருவதாக தே.செ.கோபால் குறிப்பிட்டார். கொடியேற்று விழா நிகழ்வுகளின் ஒருங்கி ணைப்பாளராக கி.இராம லிங்கம், மாவட்ட பகுதிகளில் மய்யங்களில் புத்தக விற்பனை – கொள்கை பரப்புரைப் பணிகளுக்குரிய ஒருங் கிணைப்பாளராக தி.செ.கணேசன், மாவட்டத்தி லுள்ள அரசு நூலகங்களில் ‘விடுதலை’ இடம் பெறச் செய்தல் மற்றும் டி.என்பி.எஸ்.சி. உள்ளிட்டட அரசு போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் பங்கு பெறும் பயிற்சி முகாம் ஏற்பாட்டுப் பணிகளின் ஒருங்கிணைப்பாளராக நா.பார்த்திபன் என அறிவிக்கப்பட்டனர்.
தீர்மானங்கள்
கடந்த 19.5.2024 அன்று நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கான பொதுத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் இந் தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட 40 வேட் பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இதற்கு முழு முதற் காரணமான தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரப் பணிகளில் சிறப்பாக ஈடுபட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மற்றும் இந் தியா கூட்டணியைச் சேர்ந்த அனைத்துக் கட் சித் தலைவர்களுக்கும், தமிழ்நாட்டு வாக்காளர் களுக்கும் இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது. வெற்றி வாகை சூடிய மக்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் இக்கூட் டம் வாழ்த்து கூறி மகிழ்ச்சியடைகிறது.
வடசென்னை மாவட்டத்தைச் சேர்ந்த வடசென்னை, மத்திய சென்னை மக்களவைத் தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன் ஆகியோருக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சியினரோடு ஒருங்கி ணைந்து தேர்தல் பிரச்சாரப் பரப்புரைப் பணிகளில் ஈடுபட்ட வடசென்னை மாவட்ட கழகத் தோழர்கள் அனைவருக்கும் இக்கூட்டம் பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
‘விடுதலை’ வளர்ச்சியே தமிழினத்தின் மறுமலர்ச்சி என்பதே வரலாற்று உண் மையாகும். அதன்படி தமிழர் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க ‘விடுதலை’ ஏட்டுக்கு சந்தா சேர்க்கின்ற பணிகளில் மாவட்ட கழகத் தோழர்கள் முழுமையாக ஈடுபடுமாறு இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – ‘குடிஅரசு’ ஏட்டின் நூற்றாண்டு விழாவையொட்டி வட சென்னை மாவட்டத்தின் 100 இடங்களில் கழகக் கொடியேற்று விழாவினை நடத்திட இக்கூட்டம் முடிவு செய்கிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
கூட்டத்தின் நிறைவாக நா.பார்த்திபன் நன்றி கூறினார்.