அயோத்தி கோவில் இருக்கின்ற பைசாபாத் தொகுதியில் அகிலேஷ் யாதவ் கட்சிக்காரர் – இந்தியா கூட்டணியைச் சேர்ந்த ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர் வெற்றி பெற்றார். சம்பூகன் வெற்றி பெற்றார் – இராமன் தோற்றுப் போனான். இதுதான் புதிய ராமராஜ்ஜியம், ஜனநாயக ராஜ்ஜியம் என்றாயிற்று.
இதுதான் பெரியார் வெற்றி பெற்றார் என்பதற்கு அடையாளமாகும். அயோத்தியில் பெரியார் பெற்றி பெற்றார்.
இதை இன்றைக்கு மட்டும் சொல்லவில்லை நாங்கள். 1971 ஆம் ஆண்டே நிரூபித்திருக்கின்றோம்.
சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் உரையிலிருந்து