சென்னை, ஜூலை 11 தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை நியமனம் செய்து முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து, திமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு, திமுக மக்களவை குழுத் துணைத் தலைவராக தயாநிதிமாறன், திமுக மக்களவை கொறடாவாக ஆ.ராசா, திமுக மாநிலங்களவை குழுத் தலைவராக திருச்சி சிவா, திமுக மாநிலங்களவை குழுத் துணைத் தலைவராக சண்முகம், திமுக மாநிலங்களவை கொறடாவாக பி.வில்சன் மற்றும் இரு அவைகளின் பொருளாளராக எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க. நாடாளுமன்ற குழுவுக்கு புதிய பொறுப்பாளர்கள்
Leave a Comment