இன்று அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை சமாளிக்க, தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அதிகப்படியான பணம் தேவைப்படுகிறது. இதனாலேயே பெண்கள் வீட்டில் உள்ள வேலைகளை செய்து முடித்துவிட்டு வருமானம் ஈட்டுவதற்கான வணிக நடவடிக்கைகளில் கவனம் செலுத்த ஆர்வம் காட்டுகின்றனர்.
வீட்டிலேயே பேக்கரி தொடங்கி சாக்லேட், கேக் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்யலாம், குறிப்பாக விழாக் காலங்களில் வீட்டில் இனிப்பு வகைகள், முறுக்கு தயாரித்து வியாபாரம் செய்யலாம்.
கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, மண்பாண்டம், அலங்காரப் பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள் போன்றவற்றை தயாரிக்க குறைந்தபட்ச முதலீடு இருந்தால் போதும்.
கணினியில் டிசைனிங் உள்ளிட்ட பல்வேறு திறன்கள் கொண்ட பெண்களுக்கு மேலும் வருவாய் கிடைக்கும்.
தமிழ்நாட்டில் தற்போது அதிகப்படியான பெண்கள் வீட்டில் தையல் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது தையல் தொழில் செய்யும் பெண்களுடைய எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
மேலும் தற்போதைய நவீன சமூகத்தில் அழகுக் கலை பெண்கள் மத்தியில் அதிக ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால் வீட்டிலேயே அழகு கலை சார்ந்த செயல்பாட்டை செய்யும் பெண்கள் அதிக அளவில் வருமானம் ஈட்டி வருகின்றனர். மேலும் வாடிக்கையாளர் வீடு தேடி சென்று சில மணி நேரங்கள் செலவிட்டு அதிக வருமானமும் ஈட்டி வருகின்றனர்.