தாய்மை அடைவது பெரும் பேறு என்று சொன்னாலுமே கூட ஒரு குழந்தையைப் பெற்றெடுப் பதற்குள் ஒரு தாய் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியா கவும் பல பிரச்சினைகளைக் கடந்து வர வேண்டியிருக்கிறது. சரி, குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று நினைத்தால் அதுவும் இல்லை. பிரசவத்துக்குப் பிறகும் சில உளவியல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்கின்றனர் உளவியல் மருத்துவர்கள்.
‘‘பிரசவத்துக்குப் பிறகு நிகழும் ஹார்மோன் மாற்றங்களின் விளைவாக, குழந்தை பிறந்து 4-6 வாரங் களுக்குள் 30 – 75 சதவிகித பெண்களுக்கு baby blues எனும் உளவியல் பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உடல் சோர்வு, சோகம், அழுகை, குழப்ப நிலை ஆகியவை இதன் காரணமாக ஏற்படும். நமது ஒவ் வொரு நடவடிக்கைக்குக் பின்பும் ஏற்படும் மன அழுத்தத்துக்கென அளவீடுகள் இருக்கின்றன.
அதன்படி பிரசவிப்பது 75 சதவிகித மன அழுத்த அளவு கொண்டது. பிரசவத்துக்குப் பிறகு ஒரு குழந்தையின் தாய் என்கிற பொறுப்புகளுக்குள் வரும்போது அது தரும் அழுத்தமே இதற்குக் காரணமாகிறது. இந்த baby blues இயல்பான பிரச்சினை என்பதால் இதற்கு மருந்து, மாத்திரைகள் தேவையில்லை. இது சாதாரண பிரச்சினைதான் என்பதை உணர வைத்து, அவரை ஆற்றுப்படுத்தினாலே போதும். இரண்டு வாரங்களில் இப்பிரச்சினையிலிருந்து விடுபட்டு விடுவார்கள்.
இப்பிரச்சினைக்கு ஆட்பட்டவர்கள் மன நல மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். மருந்து, மாத்திரைகள் மற்றும் கவுன்சிலிங் மூலம் இப்பிரச்சினை யிலிருந்து பாதிக்கப் பட்டவரை விடுவிக்க முடியும். இதிலேயே கொஞ்சம் அரிதாக postpartum psychosis எனும் பிரச்சினை ஆயிரத்தில் ஒருவருக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தீவிர மனநோய்களுக்கு உண்டான அறிகுறிகள் இப்பிரச்சினையால் ஏற்படும். தவறான நம்பிக்கை, தனக்கு எதிராக எல்லோரும் செயல்படு கிறார்கள் என்பது போன்ற எதிர்மறையான எண்ணம், காதில் குரல் கேட்பதைப் போன்ற பிரம்மை (hallucination) ஆகியவை ஏற்படும்.
காதில் ஒலிக்கும் குரல் குழந்தையைக் கொன்று விடு என்றும் சொல்வது போலான பிரம்மை ஏற்படும். அதன் காரணமாக நூற்றில் 4 பேர் குழந்தையை கொல்வ தற்கும், 5 பேர் தற்கொலை செய்து கொள்வதற்கும் வாய்ப்பிருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. கேட்பதற்கு அதிர்ச்சியாக இருக்கிறதல்லவா? பிரச்சினையின் தீவி ரத்தை நாம்தான் உணர்ந்து செயல்பட வேண்டும். இப்பிரச்சினை கண்டறியப்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிப்பது மட்டுமே இதற்கான தீர்வாக இருக்கும். மன நலப் பிரச்சினைகள் சார்ந்த விழிப்புணர்வு பரவலாக சென்றடைய வேண்டும். அப்படி செல்கையில் இப்பிரச்சினை பற்றிய புரிதல் இருக்கும்போது இதனை எதிர்கொள்வது எளிதாக இருக்கும்.’’ என்கிறார் ஜெயக்குமார்.