சென்னை, ஜூன் 11- இந்தியாவில் 2030-ஆம் ஆண்டுக்குள் காற்றாலை மூலம் 500 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்படுள்ளதாக தேசிய காற்றாலைகள் நிறுவன மேனாள் பொது இயக்குநா் எஸ்.கோமதி நாயகம் தெரிவித்தார்.
சென்னை தரமணியில் உள்ள சிஎஸ்அய்ஆா் வளாகத்தில் நேற்று (10.6.2024) நடைபெற்ற சிஎஸ்அய்ஆா்-எஸ்இஆா்சி
நிறுவனத்தின் 60ஆம் ஆண்டு வைர விழா கொண்டாட்டத்தில் அவா் பேசியதாவது:
ஆற்றலுக்கான பொறியியல் கட்டமைப்புகள் மிகவும் முக்கி யத்துவம் வாய்ந்தவை. இந்தியாவில் 2030ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்தியா 2070ஆம் ஆண்டுக்குள் கார்பன் அல்லாத நாடாக மாற எதிர்கொள்ள வேண்டிய சவால்களையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். இதில் கட்டமைப்பு பொறியாளா்களின் பங்கு முக்கியமானது என்றார்அவா்.
நிதி ஆயோக் உறுப்பினா் விஜய்குமார்சரஸ்வத்:“கட்டமைப்பு பொறியியல் என்பது நமது சமூக த்தின் ஒரு பகுதியாகும். இன்றைய காலகட்டத்தில் கட்டமைப்பு பொறியியல் பெரியளவில் மாற்றமடைந்து வருகிறது. காலநிலை மாற்றத்தால் இயற்கை பேரிடா்களைச் சந்தித்து வருகிறோம். எனவே, அதற்கேற்ப வடிவமைப்பு மாதிரிகளை தயார்செய்வது அவசியம். சூழ்நிலைக்கு ஏற்ப நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்து கட்டமைப்பு பொறியாளா்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
நிலையான உட்கட்டமைப்பு வளா்ச்சியானது 2047ஆம் ஆண்டுக்குள் 40 ட்ரில்லியன் பொருளாதாரமாக மாறுவதை இலக்காக கொண்டு பயணிக்க வேண்டும் என்றார்அவா்.
முன்னதாக சிஎஸ்அய்ஆா் வைர விழா இலச்சினை, கட்டமைப்பு பொறியியல் தொடா்பான இதழ், ஆன்லைன் இணையதளம் ஆகியவற்றை நிதி ஆயோக் உறுப்பினா் விஜய்குமார்சரஸ்வத் வெளியிட்டார்.
தொடா்ந்து சிஎஸ்அய்ஆா் வைர ஆண்டு விழா இதழை அதன் இயக்குநா் ஆனந்தவள்ளி வெளியிட்டார். இந்நிகழ்வில் சிஎஸ்ய்ஆா் மூத்த விஞ்ஞானி எஸ் பாரிவள்ளல், ஜெ.ராஜசேகா், நிர்வாக அதிகாரி லோக்நாத் பட்நாயக் உள்ளிட்டோர்பங்கேற்றனா்.