11.6.2024
டெக்கான் ஹெரால்ட்:
* பாடத்திட்டத்தில் மனுஸ்மிரிதி இடம் பெறுவதற்கு எதிர்ப்பு. பி.ஆர்.அம்பேத்கரின் பேரன் ஆனந்தராஜ் ராய்காட்டில் நடந்த போராட்டத்தில் மனுஸ்மிருதியை எரித்தார்.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* நீட் தேர்வை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மேனாள் நீதிபதி ஏ.கே.ராஜன் வேண்டுகோள்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தங்களுக்கு கிடைக்கும் சொற்ப வருமானம், வாழ்க்கை குறித்தே பெரும்பாலானோர் கவலைப்படு கின்றனர், இஸ்லாமியர்கள் கால ஆட்சி குறித்து அல்ல என்பதை இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன என்கிறார் பட்ரலேகா சாட்டர்ஜி.
* இன்னும் மூன்று மாதங்களில் வர இருக்கும் மகாராட்டிரா சட்டமன்ற தேர்தல் வெற்றி தான் அடுத்த இலக்கு என்கிறார் சரத் பவார்.
* ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த ஆலோசனை கூட்டங்களை தெலங்கானா பிற்படுத்தப்பட்டோர் ஆணை யம் நடத்தி வருகிறது. விரைவில் அறிக்கை அளித்திட முடிவு.
தி இந்து:
* 2024 தேர்தலில் ஹிந்துத்துவா அரசியல் பின்னடைவை சந்தித்துள்ளது, சி.எஸ்.டி.எஸ். – லோக்நிதி ஆய்வு அறிக்கை.
* 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாமல், 14 கோடி மக்கள் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் பலன்களை இழந்துள்ளனர்: காங்கிரஸ் குற்றச்சாட்டு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நீட் தேர்வு முறைகேடுகள்: டில்லியில் கல்வி அமைச்சகத்திற்கு வெளியே மாணவர்கள் போராட்டம், மறுதேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை.
* என்டிஏ கூட்டணி கட்சிகளுக்கு உதிரி இலாகாக்கள் அளிக்கப்பட்டுள்ளது, ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் எங்களுக்கு கேபினட் தகுதி அமைச்சர் வேண்டும், ஷிண்டே சிவசேனா அணி உறுதி.
* இந்திய வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாத தேசிய முன்னணி அரசு அமைச்சரவை.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மக்களவைத் தேர்தல் தோல்வியில் வெடித்த பிரச்சினை விஸ்வரூபம் – அண்ணாமலை, தமிழிசை ஆதரவாளர்கள் மோதல் வலுக்கிறது.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment