தலையாமங்கலம் குடும்ப விழா

Viduthalai
1 Min Read

ஒரத்தநாடு, ஜூன்.11- ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய கழக தலைவர் தலையாமங்கலம் இரா.துரைராசு அவர்களின் 60-ஆம் ஆண்டு பிறந்தநா ளில் அவருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
தலையாமங்கலம் இரா. துரைராசுவின் 60ஆம் ஆண்டு பிறந்தநாள், இரா.துரைராசு-மாதவி ஆகியோரின் 33ஆம் ஆண்டு திருமண நாள் 10-06-2024 அன்று மாலை அவர்களது இல்லத்தில் மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் தலைமையில் கேக் வெட்டி கொண்டா டப்பட்டது.

பகுத்தறிவாளர்கழக ஊடகப்பிரிவு மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி, மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முனைவர் வே. ராஜவேல், மாநில வீதி நாடக கலைக்குழு அமைப்பாளர் பி. பெரியார்நேசன், மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி, ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அ. சுப்பிரமணியன், ஒரத்தநாடு நகர தலைவர் பேபி ரெ.இரவிச்சந்திரன், மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் சடையார்கோயில் வெ.நாராயணசாமி, தஞ்சை மாநகர தலை வர் பா.நரேந்திரன், தஞ்சை மாநகர இணைச் செயலாளர் இரா.வீர குமார், ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் கோவி.இராமதாஸ், ஆகியோர் பிறந்தநாள் மற்றும் 33ஆவது திருமண நாள் காணும் இரா.துரைராசு-மாதவி இணையருக்கு பயனடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மகன் து. வெற்றி வேந்தன் உள்ளிட்ட குடும்பத்தினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.‌ஜெயக்குமார் உள்ளிட்ட கழக பொறுப்பாளர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு இரா.துரைராசு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்பிரமணியனின் 23ஆவது திருமண நாளை முன்னிட்டு அவருக்கு கழக பொறுப்பாளர்கள் அனைவரும் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *