தினமலர்’, 11.6.2024, பக்கம் 8
தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் (புதுவையையும் சேர்த்து) 40–க்கு 40 இடங்களில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 100 விழுக்காடு வெற்றி பெற்றதைத் தாங்க முடியாத ‘தினமலர்’, ‘‘உலக்கையை எடுத்துக் குத்திக் கொள்வதுபோல’’ குத்திக் கொள்கிறது – அங்கலாய்க்கிறது.
தி.மு.க. ஒரு மாநிலக் கட்சி. 40 இடங்களில் வெற்றி பெற்றாலும், ஒன்றியத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்பது தெரியாதா? இந்த நிலையில், பா.ஜ.க. வெற்றியைத் தோல்விக்கு நிகரானது என்று சொல்லுவது சுத்த பிதற்றல்.
இப்பொழுது அமைந்துள்ள ஒன்றிய பி.ஜே.பி. அரசு, சென்ற முறை தனித்த பெரும்பான்மையோடு ஆட்சி நடத்தியதுபோல இம்முறை முடியாது; அடுத்த கட்சிகளின் தயவில்தான் ஆட்சி நடத்த முடியும் என்ற பொருளில் திராவிடர் கழகத் தலைவர் கூறிய கருத்தை புரிந்துகொள்ளும் அளவுக்குத் தினமலருக்குப் புத்தியில்லையே, என்ன செய்வது?
‘தினமலரின்’ புத்தி!
Leave a Comment