நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கருக்கு ஒரு நீதி,வெயிலிலும் மழையிலும் அலைந்த தமிழிசைக்கு வேறொரு நீதியா?

2 Min Read

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சமூக நீதி கேள்வி

சென்னை, ஜூன் 11- நிர்மலா சீதாராமன், ஜெய் சங்கருக்கு ஒரு நீதி,தமிழிசை சவுந்தரராஜனுக்கு வேறு ஒரு நீதி என்றும், வெயிலிலும்,மழையிலும் அலைந்த தமிழிசையை பா.ஜனதா கைவிட்டு விட்டது என்றும் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.

‘நீட்’ தேர்வு குளறுபடிகள்

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங் கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை நேற்று (10.6.2024) செய்தியாளர்களிடம் கூறிய தாவது:-

‘நீட்’ தேர்வு விலக்கு கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். சட்டமன்றத்தில் ‘நீட்’ தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றி ஆளுநருருக்கு அனுப்பினோம். ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4ஆம் தேதியே நீட் தேர்வு முடிவுகளும் வெளியானது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் பரபரப்பில் நீட் தேர்வு முடிவுகள் வெளியில் தெரியாமல் போய் விடும் என்று நோக்கத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளி யிடப்பட்டது.

அப்போதே அதில் குளறுபடிகள் இருக்கும் என்று சந்தேகித்தோம்.அதேபோன்று அதில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன.

உடனடியாக நீக்க வேண்டும்

நீட் தேர்வில் இரட் டைப் படையில் தான் மதிப்பெண் வழங்கப்படும். ஆனால் ஒற்றைப்படையில் மதிப்பெண் வழங்கப்பட் டுள்ளது.

இதுகுறித்து கேட்டால், வினாத்தாள் கொடுப்பதற்கு தாமதமானதால் கருணை மதிப்பெண் கொடுக்கப்பட்டது. என்று சொல்கிறார்கள். ஆனால், ஏழை-எளிய மாணவர்களுக்கு இந்த கருணை மதிப்பெண் வழங்கப்படவில்லை.

நீட் பயிற்சி நிறுவனத்தில் படித்தவர்களுடன் ஒப்பந்தம் போட்டு கருணை மதிப்பெண் கொடுத் திருக்கிறார்கள். எனவே, நீட் தேர்வை உடனடியாக நீக்க வேண்டும்.

இந்தியா பாதுகாப்புடன் இருக்கிறது என்று மோடி தேர்தல் பிரசாரம் செய்தார். ஆனால் குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமராக மோடி பதவியேற்கிறார். இன்னொரு இடத்தில் 10 பேரை பயங்கரவாதிகள் கொல்கிறார்கள்.

தமிழிசையை கைவிட்டு விட்டது

தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங் கில் நாளை (11.6.2024) நடை பெற உள்ள காங்கிரஸ் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட் டத் தில் சுமார் 1,500 பேர் கலந்து கொள்கிறார்கள், கூட்டத்தில், கட்சி கட்டமைப்பை வலுப்படுத் துவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும்.

நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கருக்கு மீண்டும் ஒன்றிய அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு ஒரு நீதி, தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஒரு நீதி.
வெயிலிலும், மழையி லும் அலைந்த தமிழிசையை பா.ஜனதா கைவிட்டு விட்டது. – இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *