சென்னை, ஆக. 30 – தமிழ்நாட்டின் பொருளாதாரம் 8.19 சதவீதமாக உள் ளது என நிதி அமைச்சர் தங்கம் தென் னரசு தெரிவித்தார். தமிழ்நாடு மாநில திட்டக்குழு அலுவலகத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (28.8.2023) செய்தியாளர்களை சந்தித் தார். அப்போது அவர் பேசுகையில், 2022_-2023ஆம் ஆண்டில் தமிழ்நாட் டின் உற்பத்தி மதிப்பு நிலைத்த விலை யில் 20 லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. 2022_20-23ஆம் ஆண்டுக்கான நடப்பு விலையில் தமிழ் நாட்டின் உற்பத்தி மதிப்பு 23 லட்சத்து 64 ஆயிரத்து 514 கோடி ரூபாயாக உள்ளது. தமிழ்நாட்டின் பொருளா தாரம் 8.19 சதவீதமாக உள்ளது. நாட் டின் 2ஆவது மிகப்பெரிய பொருளா தாரமாக இந்தியா உள்ளது. இந்திய உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.1 சதவீதமாக உள்ளது’ என்றார்.
2021_20-22ஆம் நிதியாண்டில் 7.92 சதவீதமாக இருந்த தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2022-20-23ஆம் நிதியாண்டில் 8.19 சதவீதமாக அதிகரித்துள்ளது. நாட்டின் பிற பகுதி களை விட தமிழ்நாட்டில் விலைவாசி குறைவாக உள்ளது. இந்தியாவில் தனி நபர் வருமானம் சராசரி 98 ஆயிரத்து 374 ரூபாயாக உள்ள நிலையில் தமிழ் நாட்டில் அதை விட அதிகமாக உள் ளது. தமிழ்நாட்டில் தனிநபர் வரு மானம் 1 லட்சத்து 66 ஆயிரத்து 727 ரூபாயாக உயர்ந்துள்ளது.’ என்றார்.