ஆவடியில் அம்மன் கோயில் பூட்டு உடைப்பு – பணம், நகை திருட்டு
ஆவடி, ஜூன் 10- ஆவடி நந்தவன மேட்டூர், குமரன் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 43). அதே பகுதியில் உள்ள ஆதிபராசக்தி பொன்னியம்மன் கோவில் நிர்வாகியாக உள்ளார். நேற்று (9.6.2024) காலை கோவிலுக்கு சென்று பார்த்தபோது கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவிலுக்குள் சென்று பார்த்தபோது அம்மன் சிலை நெற்றியில் இருந்த அரை பவுன் தங்க பொட்டு மற்றும் உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது. இதுபற்றி ஆவடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.