கும்பகோணம்,ஆக.29 – கும்பகோணம் மாநகர திராவிடர் கழகத்தின் தலைவர் கவுதமன் குமாரசாமி 25.08.2023 அன்று அதிகாலை 1.30 மணி அளவில் மறைவுற்றார்கள்.
திராவிடர் கழகத்தின் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அலைபேசி வாயிலாக மறைந்த கவுதமன் அவர்களுடைய இணையர் வசந்தி அவர்களிடம் ஆறுதல் கூறினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் கலந்து கொண்டு மறைந்த கவுதமன் உடலுக்கு மலர் மாலை வைத்து இல்லத்தினர் அனைவருக்கும் ஆறுதல் கூறினார்.
மறைந்த கவுதமன் அவர்களுடைய விழிகள் இரண்டும் கவித்தலம் தந்தை பெரியார் விழி மற்றும் உடல்கொடை இயக்கம் சார்பாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது.
அவ்வாறு வழங்கப்பட்ட விழிகளை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் மூலமாக கவுதமனின் துணைவியார் வசந்தி மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனைக்கு கொடையாக வழங்கினார்.
நிகழ்ச்சியில் கும்பகோணம் மாநக ராட்சியின் துணை மேயர் சுப.தமிழ ழகன் சமூக நீதி பாதுகாப்பு குழு பொறுப்பாளர் வழக்குரைஞர் ஜார்ஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில இளைஞரணி எழுச்சிப் பாசறை செயலாளர் பேராசிரியர் தமிழினி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் தணிக்கையாளர் சு.சண்முகம், செயலாளர் பேராசிரியர் ம. சேதுராமன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் பொறியாளர் க. சிவக்குமார்,மாவட்ட மகளிர் அணி தலைவர் எம்.திரிபுர சுந்தரி, மாவட்ட திராவிடர் கழக துணை செயலாளர் தமிழ்மணி ஆறு முகம், மாவட்ட திராவிடர் கழக தொழிலாளர் அணி செயலாளர் கோவி. பெரியார் கண்ணன், மாவட்ட தொழிலாளர் அணியின் தலைவர்
த. ஜில்ராஜ், சித்தார்த்தன், பட்டீஸ்வரம் கிளைக் கழக பொறுப்பாளர் இளவ ழகன், ராவணன், போட்டோ மகா தேவன், குடந்தை மவுனசாமி மடத்து தெரு அரங்க வைரமுடி, மனுநீதி சோழன் நகர் பகுதி பொறுப்பாளர் நெய்வேலி பழனிச்சாமி, நன்னிலம் சஞ்சீவி, பொறியாளர் கிருஷ்ண மூர்த்தி..
சோழபுரம் கழகத்தின் தலைவர் இரவிச்சந்திரன், செயலாளர் விளந்த கண்டம் மதியழகன், கும்பகோணம் ஒன்றிய கழக தலைவர் கோவி.மகா லிங்கம், செயலாளர் அசூர்.செல்வம், துணைத் தலைவர் ந.காமராஜ், திரு விடைமருதூர் ஒன்றிய கழக தலைவர் எம்.என்.கணேசன், செயலாளர் பவுண் டரீகபுரம் முருகேசன், நாச்சியார் கோவில் குணசேகரன், ஆசைத்தம்பி, மணிகண்டன்.
திராவிடர் தொழிலாளர் அணி மாவட்ட துணை செயலாளர் குமார மங்கலம் சங்கர், கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.விஜய குமார், மாநகர கழக செயலாளர் வழக்குரைஞர் பீ.ரமேஷ், மாவட்ட கழக செயலாளர் உள்ளிக்கடை துரை ராஜ், பாபநாசம் ஒன்றிய கழக தலைவர் தங்க. பூவானந்தம், செயலாளர் சு.கலிய மூர்த்தி, பாபநாசம் ஒன்றிய இளை ஞரணி செயலாளர் சரவணன், திருப் பனந்தாள் ஒன்றிய செயலாளர் மோகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் க.திருஞான சம்பந்தம், மாநில பகுத்தறிவாளர்கழக பொதுச்செயலாளர் வி.மோகன்,
மகளிரணி செயலாளர் கலைச் செல்வி அமர்சிங், காப்பாளர்கள் தாராசுரம் வை. இளங்கோவன், தஞ்சை அய்யனார், குடந்தை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, தஞ்சாவூர் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மற்றும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத் தின் குடந்தை ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன், சுவாமிமலை பகுத்தறிவாளர் கழக தலைவர் ஞானம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் மண்டல அய்.என்.டியு.சி. தலைவர் ஆ.வைத்திய நாதன், கும்பகோணம் குட்செட் தொழிலாளர் அணியின் தலைவர் சோழபுரம் தேவதாஸ், விடுதலை சிறுத் தைகள் கட்சியின் மண்டல பொறுப் பாளர் விவேகானந்தன், அனைத்து கட்சி களையும் சார்ந்த உள்ளூர் அரசியல் கட்சி பிரமுகர்கள், குடியிருப்போர் நல சங்கத்தை சார்ந்தவர்கள்..
மற்றும் தலைமைக் கழக அமைப் பாளர் குடந்தை க.குருசாமி, மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை
இரா.ஜெயக்குமார், குடந்தை கழக பொறுப்பாளர்கள், திராவிடர் கழக கிராமப்புற பிரச்சார அணி செயலாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், திராவிடர் கழக தொழில் நுட்ப பிரிவு தலைவர் கல்வியாளர் அழகிரிசாமி, திராவிட கார்த்திக், மனோகரன், அரசாங்கம் துரை, மாநில மாணவர் கழக மேனாள் துணை தலைவர் முனைவர் அஜிதன் மற்றும் ஏராளமான கழகத்தின் பொறுப்பா ளர்கள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தி னார்கள்.
பழவாத்தான்கட்டளை ஊராட்சி இடுகாட்டில் எந்த விதமான சடங்கு களும் இல்லாமல் இறுதி நிகழ்ச்சி செய்யப்பட்டது.