டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
➡நீட் தேர்வு மதிப்பெண் குளறுபடி குறித்து மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப் பெண்களை ஆய்வு செய்ய மேனாள் யுபிஎஸ்சி தலைவர் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவை ஒன்றிய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
➡ வெறுப்பு அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள் என அகிலேஷ் கருத்து.
➡ இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு இன்று உரிமை கோரவில்லை என்றால் நாளை உரிமை கோராது என்று அர்த்தமல்ல. கொஞ்சம் பொறுத்திருப்போம் என மம்தா பேச்சு.
➡ நீட் தேர்வு மதிப்பெண் மோசடி குறித்து சி.பி.அய். விசாரிக்க அய்தராபாத் வழக்குரைஞர் மனு.
➡ காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு. மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் ஒருமனதாக வலியுறுத்தி உள்ளனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
➡மகாராட்டிராவில், சரத் பவாரின் அனைவரையும் உள்ளடக்கிய அரசியல், பாஜகவின் டில்லி ரிமோட் கண்ட்ரோல் அரசியலை முறியடித்து வெற்றி பெற்றுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
➡ நீட் தேர்வு முடிவுகளில் மாநில மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக மகாராட்டிர அரசு குற்றச்சாட்டு; அதை ரத்து செய்ய கோரிக்கை.
➡ நீட் ‘முறைகேடுகள்’: உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை வேண்டும், அகிலேஷ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியும் கோரிக்கை.
➡ தேர்தலில் படுதோல்வி காரணமாக அண்ணா மலைக்கு எதிராக, தமிழ்நாடு பாஜக தலைவர்கள் போர்க்கொடி.
டைம்ஸ் ஆப் இந்தியா:
➡கூட்டணிக் கட்சிகளை சார்ந்திருக்கும் புதிய பாஜக தலைமையிலான என்.டி.ஏ. அரசு, அதன் முக்கிய ஆதரவு மதச்சார்பற்ற கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் அய்க்கிய ஜனதா தளத்தை மீறி, ஹிந்துத்வா அரசியலை செய்ய இயலாது.
– குடந்தை கருணா