40-க்கும் 40 வெற்றி: கோவையில் வரும் 14ஆம் தேதி முப்பெரும் விழா – திமுக கூட்டத்தில் முடிவு

1 Min Read

சென்னை, ஜூன் 9- முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக மக்களவை உறுப் பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் 5 தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நடந்து முடிந்த மக் களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 234 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. தமிழ் நாட்டை பொறுத்தவரை திமுக கூட்டணி 39 தொகுதிகளைகளிலும் வெற்றி வாகை சூடியுள்ளது.

இந்த நிலையில், முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறி வாலயத்தில் நேற்று (8.6.2024) மாலை நடைபெற்றது. இதில் 5 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன.

1. தமிழ்நாட்டின் திட்டங்களுக்காக நிதி உரிமை, மொழி உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் அய ராது குரல் கொடுப்போம்.
2. நடுத்தர மாணவர்களின் கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் அல்லது நீட் தேர்வு வேண்டாம் என சொல்லும் மாநிலங் களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். மேலும் தேசிய ஜனநாயக கூட் டணியில் அங்கம் வகிக் கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார், இந்த கோரிக்கையை கனிவுடன் கவனித்து ஒன்றிய அர சுக்கு உணர்த்த வேண்டும்.
3. நாடாளுமன்ற வளா கத்தில் அகற்றப்பட்ட தேசத் தலைவர்களின் சிலைகளை அதே இடத் தில் வைக்க வேண்டும்.
4. நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் வெற்றியை தந்த தமிழ்நாட்டு மக்கள், வழி நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.
5. வரும் ஜூன் 14இல் கோவையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவாக கொண்டாட்டம் உட்பட முப்பெரும் விழா நடத்தப்படும் என திமுக மக்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

TAGGED:
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *