நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று (8.6.2024) அண்ணா அறிவாலயத்தில், மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.அப்துல் சமது மற்றும் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். உடன் திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர்கள் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் உள்ளனர்.