8.6.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
*இந்தியா கூட்டணி எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்பட ஓர் நல்ல வாய்ப்பு என்கிறது தலையங்க செய்தி.
* நீட் என்னும் பிணியை அழித்தொழிக்க கரம்கோர்ப்போம்! அந்த நாள் வெகு தொலைவில் இல்லை! மு.க.ஸ்டாலின் அறைகூவல்!
* நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ராகுல், சசி தரூர் விருப்பம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*ராகுல் மேற்கொண்ட இரண்டு இந்திய ஒற்றுமை நடைப்பயண வழித்தடத்தில் காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் 41 இடங்களில் வெற்றி.
* விரைவில் செல்லலாம் என்று சொல்லி அதிக கட்டணம் வசூல் செய்யும் ரயில்வே துறை; ஆனால், 3 ஆண்டுகளில் வந்தே பாரத் சராசரி வேகம் மணிக்கு 84 கி.மீ. முதல் 76 கி.மீ. வரை குறைந்தது என ஆர்டிஅய் பதில்.
* மோடி அரசின் தார்மீக அதிகாரம், கவுரவம், சட்டபூர்வமான தன்மையை மக்கள் மறுத்துள்ளனர் என்கிறார் யோகேந்திர யாதவ்.
* நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பு விசாரணைக்கு காங்கிரஸ் கோரிக்கை
*மந்திர் மீது மண்டல்: உத்தரப்பிரதேசத்தில் இந்தியா கூட்டணி வெற்றி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* காவி கோட்டையை உடைத்தெறிந்து சமாஜ்வாடி கட்சி பைசாபாத் தொகுதியில் ஆறில் அய்ந்து சட்டமன்ற தொகுதியிலும் அதிக வாக்குகள் பெற்றுள்ளது.
தி இந்து:
* 38% பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் திரிணாமுல் காங்கிரஸ் புதிய மக்களவையில் அதிக பெண் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளது. தேர்தலில் கட்சியால் நிறுத்தப்பட்ட 12 பெண்களில் 11 பேர் தேர்தலில் வெற்றி பெற்றனர்
தி டெலிகிராப்:
* ‘ஆம், கருத்துக் கணிப்பில் நாங்கள் தவறு செய்து விட்டோம், பிரசாந்த் கிஷோர் ஒப்புதல் வாக்குமூலம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
*மோடி அரசுக்கு முதல் செக்? ஓபிசி பட்டியலில் 4% முஸ்லிம் ஒதுக்கீட்டை தெலுங்கு தேச ஆட்சி தொடரும்: சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ் உறுதி.
* தமிழிசை பற்ற வைத்த நெருப்பு பற்றி எரிகிறது அண்ணாமலைக்கு எதிர்ப்பு வலுக்கிறது: கட்சிக்குள் ஆதாரத்துடன் எதிர்ப்பு தெரிவிக்கும் மற்றொரு தலைவரால் பரபரப்பு
* நீட் ‘கிரேஸ் மார்க்’ விவகாரம் சர்ச்சை; தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தை நாட யோசனை.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment