அம்பத்தூர் விவேகானந்தா வித்தியாலயா பள்ளி வளாக சுற்றுச் சுவரில் திருவள்ளுவர் படம் காவி நிறத்தில் இருப்பதை கண்டு திருமுல்லைவாயில் பகுதி கழக தலைவர் இரணியன் (எ) அருள் தாஸ் தோழர்களுடன் 5.6.2024 அன்று பள்ளியில் புகார் அளித்தனர்.
அப்போது தலைமை ஆசிரியர் இல்லாததால் மேலாளரிடம் தகவல் தெரிவித்தனர். மேலாளர் “இது குறித்து நடவடிக்கை எடுக்கிறோம், பிரச்சினையை பெரிது படுத்த வேண்டாம்” என்று தெரிவித்தார்.
பெரியார் தொண்டர்களின் முயற்சியால் காவி நிறம் அழிக்கப்பட்டு வெள்ளை நிறத்தில் புதுப்பொலிவுடன் திருவள்ளுவர் படம் வரையப்பட்டது.
பிரச்சினையை பெரிதாக்காமல் உடனே மாற்றிய பள்ளி நிர்வாகத்திற்கு கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் வாழ்த்து தெரிவித்தார்.