ஆண்கள் எப்படியிருந்தாலும் அக்கறையில்லை. பெண்களுக்குத்தான் எல்லாக் கட்டுப்பாடுகளுமிருக்க வேண்டுமென்ற மூட அறிவீனமான கொள்கை இருக்கும் வரையிலும் நீங்கள் முன்னேற முடியாது. சாப்பிட்டுக் கைகழுவினதும் “கதவைச் சாத்திக் கொள்”ளென்று கணவன் வெளியே சென்றால், சாப்பிடும்போதே மோர் விடுவதற்கு வேலைக்காரியைக் கூப்பிட்டு, “அய்யாவுக்கு மோர் விடு – நான் போய் விட்டு வருகிறேன்” என்று மனைவி சொல்லிவிட்டு வெளியேறினால்தான் ஆண்களுக்கு அறிவு வரும்.
(‘திராவிடன்’ 5.8.1929′)