ஜூன் 4 ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்ட கழக தலைவர் கே.சி.எழிலரசன் பிறந்த நாள். அதையொட்டி கழகத் தோழர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் மகிழ்ந்தனர். இந்நிகழ்வில் மாநில பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் அண்ணா.சரவணன், மாநில மகளிரணி பொருளாளர் எ.அகிலா, மாவட்ட செயலாளர் பெ.கலைவாணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சி.ஏ.சிற்றரசன், மாவட்ட விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் எம். என். அன்பழகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சி. தமிழ்ச்செல்வன், மாவட்ட துணைத்தலைவர் அசோகன், கந்திலி ஒன்றிய தலைவர் பெ. ரா. கனகராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ் குமார், நகர செயலாளர் ஏ. டி. ஜி. சித்தார்த்தன், சோலையார்பேட்டை அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட ஆசிரியரணி தலைவர் கோ. திருப்பதி, நகர இளைஞரணி அமைப்பாளர் அக்ரி அரவிந்த், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் விஜயா அன்பழகன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் இரா. கற்பக வள்ளி, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் சபரிதா,நகர இளைஞரணி பொறுப்பாளர் சிவா ஆகியோர் பங்கேற்றனர்.