சிவகங்கை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் திருமலை ஆ. முத்துராமலிங்கம் வாழ்விணையரும், சிவகங்கை மாவட்ட கழகமகளிர் அணி தலைவர் மணிமேகலை சுப்பையாவின் நெருங்கிய உறவினருமான ஆசிரியை கிருஷ்ணவேணியின் இறுதி நிகழ்வில் கழகத் தோழர்கள் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினர். நிகழ்வில் சிவகங்கை மாவட்ட தலைவர் இரா.புகழேந்தி, மாவட்ட செயலாளர் பெரு.ராஜாராம், காரைக்குடி மாவட்ட கழக தலைவர் ம.கு.வைகறை மற்றும் மணிமேகலை சுப்பையா குடும்பத்தினர் பங்கேற்றனர்.