நாகர்கோவில் கோட்டாறு அண்ணா அகத்தில் உள்ள பெரியார் தொண்டர் வே.பெ.வே சண்முகம் இல்லத்தில் நடந்த பிறந்த நாள் நிகழ்வில் அவருடைய படத்திற்கு மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
காப்பாளர் ஞா. பிரான்சிஸ், இலக்கிய அணி செயலாளர் பா. பொன்னுராசன், மாநகர தலைவர் ச.ச.கருணாநிதி, மாணவர் கழகம் பொன்.எழில், அரசன், தோழர்கள் கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, ச.ச.தமிழரசன் ச.ச.சத்யாராணி மற்றும் பெரியார் பற்றாளர்கள் பங்கேற்றனர். பெரியார் தொண்டரது பிறந்தநாளில் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை ச.ச. மணிமேகலை வழங்கினார்.
பெரியார் தொண்டர் வே.பெ.வே சண்முகம் குடும்ப விழா
Leave a Comment