குமரி, ஜூன் 6- தந்தை பெரியாருடைய கருத்துகளை தெரிவிக்கும் வகையில், குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக குமரிமாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கையினை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு, காப்பாளர் ஞா.பிரான்சிஸ், கழக குமரிமாவட்ட இலக்கிய அணி செயலாளர்பா. பொன்னுராசன் மற்றும் பலரும் பங்கேற்றனர். அதிகமான மாணவ,மாணவியர்கள் பெரியாருடைய வரலாறு, கொள்கைகளை தெரிந்து கொண்டனர்.
குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக கல்லூரி மாணவர்களிடம் பகுத்தறிவுப் பிரச்சாரம்
Leave a Comment