பெரிய குளம், ஜூன் 6- பெரியகுளம் கீழ வடகரை ஊராட்சிக்கு உட்பட்ட அழகர்சாமிபுரத்தில் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 2.6.2024 அன்று காலை10.30.மணியளவில் நடைபெற்றது.
இப்ராஹிம் பாட்ஷா தலைமை ஏற்று நடத்தினார். செயலாளர் மாரிமுத்து வரவேற்று உரையாற்றினார்.
செயலாளர் மாரி முத்து, பொருளாளர் வழக்குரைஞர் காமராஜர், பெரியகுளம் நகர் பக ஈ.பி. முருகன், துணைச் செயலாளர் எழுத்தாளர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்கள்.
தேனி மாவட்ட செயலாளர் அ.மோகன் கலந்துரையாடல் கூட்டம் ஏன் கூட்டப்பட்டது.
பகுத்தறிவாளர் கழகம் ஏன் தொடங்கப்பட்டது? அதன் பணிகள் என்ன?
அதன் அமைப்பு முறைகள், அமைப்பு தொடங்கிட வேண்டிய தன் அவசியம் மற்றும் வளர்க்க வேண்டியதன் நோக்கம் பற்றியும், தேனி மாவட்டத்தில் பகுத்தறிவாளர் கழ கம் எப்படி செயல் பட வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறி சிறப்பு உரையாற்றினார். மேலும் அழகர்சாமிபுரம் பொது மக்களின் நலன் கருதி மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அழகர்சாமிபுரம் மேடை தெருவில் பல மாதங்களாய் சாலை வசதி ஏற்படுத்தி தரா மல் காலதாமாத படுத்தி யதால், ஊராட்சி மன்ற அலுவலர்களை சந்தித்து விரைவாக சாலை வசதி செய்துதர வேண்டும் எனவும், கீழ வடகரை அழகர்சாமிபுரம் பெரு மாள்புரம் பகுதிகளில் கல்வி பயிலும். ஏழை மாணவ, மாணவிகளுக்கு. குறிப்பேடுகள் எழுது கோல் வழங்கி சிறப்பிப்பது எனவும், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் முற்போக்கு சிந்தனை உடையவர்கள் அனைவரும் விடுதலை சந்தாவினை சேகரித்து செலுத்த வேண்டுமெனவும் ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவாக அழ.மோகன் துணை தலைவர் நன்றியுரை ஆற்றினார்.