ராகுல் காந்தியின் பழைய பேச்சு சமூக வலைதளங்களில் வைரல்
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி தமிழ்நாட்டில் ஒன்று அல்லது 2 இடங்களை கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இந்த இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகின.
இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து, தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சமூக வலைதளங்களில் வெற்றிக் கொண்டாட்டங்களை பதிவு செய்தார்கள். அப்போது, கடந்த 2022ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியின் உரை வைரலானது.
‘உங்கள் (பா.ஜனதா) வாழ்நாள் முழுவதும் ஒரு போதும் (Never/Ever) தமிழ்நாடு மக்களை உங்களால் ஆள முடியாது, அது உங்களால் முடியவே முடியாது’ என்ற ராகுல் காந்தியின் உரை வைரலானது. தமிழ்நாடு காங்கி ரஸ் கட்சி தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில் அந்த காட்சிப் பதிவை பதிவு செய்துள்ளது.