சென்னை, ஜூன் 6 அரசு அய்டிஅய்-களில் சேர நாளை (7.6.2024) வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது: அரசு அய்டிஅய்-க்களில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த மே 10-ஆம் தேதி முதல் ஆன்லைனில் (www.skilltraining.tn.gov.in) பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பக் கட்டணம் ரூ.50. இதை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் வாயிலாக இணைய வழியில் செலுத்தலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 7-ஆம் தேதி ஆகும்.
அரசு அய்டிஅய்-யில் சேரும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.750 உதவித்தொகை, மடிக்கணினி, ஷூ, சீருடை, வரைபடக்கருவிகள், விடுதி வசதி, இலவச பேருந்து அட்டை ஆகியவை வழங்கப்படுகின்றன. எனவே, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசு அய்டிஅய்-யில் சேரலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.