நாடாளுமன்றத் தேர்தலுக்காக சமையல் எரிவாயு விலை குறைப்பு நாடகம்!

2 Min Read

மோடி அரசை சாடிய மல்லிகார்ஜூன கார்கே!

அரசியல்

புதுடில்லி, ஆக.31– நாட்டு மக்களின் கோபத்தை ரூ.200 மானியத்தால் குறைக்க முடியாது என காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே விமர்சித்துள் ளார்.

இந்தியாவில் 2014ஆம் ஆண்டு மோடி அரசு ஆட்சிக்கு வந்தபோது வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.417 ஆக இருந்தது. ஆனால் படிப்படியாக ரூ.1118 ஆக உயர்ந்துள்ளது.  

இந்நிலையில் 5 மாநிலங்களில் தேர்தல் நெருங்கும் நிலையில், வீட்டு உபயோ சமையல் எரிவாயு விலையை ரூ.200 குறைத்துள்ளது. மேலும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களுக்கு ரூ.200 மானியம் வழங்கப்படும் எனவும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு தேர்தல் நாடகம் என எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில், கஷ்டத்தில் இருக்கும் நாட்டு மக்களின் கோபத்தை ரூ.200 மானியத்தால் குறைக்க முடியாது என காங் கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “எப் போது வாக்குகள் குறைய ஆரம் பிக்கிறதோ, அப்போதே தேர்தல் பரிசுகள் விநியோகிக்க ஆரம்பம் ஆகும்!

மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை கொள்ளையடித்த இரக்கமற்ற மோடி அரசு, தற் போது தாய் மற்றும் சகோதரிகள் மீது போலியான நல்லெண் ணத்தை காட்ட வருகிறது. ஒன்ப தரை ஆண்டுகளாக சாமானி யனின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டே இருந்தார்கள், அப் போது ஏன் எந்த ஒரு “பாசப் பரிசு”ம் நினைவுக்கு வரவில்லை?

140 கோடி இந்தியர்களை ஒன்பதரை வருடங்களாக சித் திரவதை செய்துவிட்டு, “தேர்தல் லாலிபாப்களை” கைமாறுவது பலிக்காது என்பதை பாஜக அரசு தெரிந்து கொள்ள வேண் டும். உங்கள் பத்தாண்டு கால பாவங்கள் கழுவப்பட முடி யாதது.

பா.ஜ.கவால் அமல்படுத்தப் பட்ட பணவீக்கத்தை எதிர் கொள்ள, பல மாநிலங்களில் முதன்முறையாக காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்கு ரூ.500 உரு ளைகளை வழங்கப் போகிறது. ராஜஸ்தான் போன்ற பல மாநிலங்கள் ஏற்கனவே இதை அமல்படுத்தியுள்ளன.

2024இல் துன்பத்தில் இருக்கும் நாட்டு மக்களின் கோபத்தை ரூ.200 மானியத்தால் குறைக்க முடியாது என்பதை மோடி அரசு அறிந்து கொள்ள வேண் டும். இந்தியாவைப் பற்றிய பயம் நல்லது, மோடி அவர்களே! பொதுமக்கள் முடிவு செய்து விட்டனர். பணவீக்கத்தை முறிய டிக்க, பா.ஜ.க.வுக்கு வெளியேறும் கதவை காட்டுவதுதான் ஒரே வழி” என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *