மதிமுக சார்பில் திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற துரை வைகோ தமிழர் தலைவரைச் சந்தித்து பொன்னாடை அணிவித்தார். துரை வைகோ அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், மதிமுக பொருளாளர் மு.செந்தில்அதிபன், கொள்கை விளக்கச் செயலாளர் ஆ. வந்தியத்தேவன், அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூன ராஜ், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ரகுராமன் மற்றும் மதிமுக பொறுப்பாளர்கள் உள்ளனர். தந்தை பெரியார் நினைவிடத்தில் துரை வைகோ மதிமுக தோழர்களுடன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். (சென்னை, 5.6.2024)
திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற துரை வைகோவிற்கு தமிழர் தலைவர் வாழ்த்து
Leave a Comment