கோவை, ஜூன் 5- திராவிடர் கழக தோழர் சுயமரியாதைச் சுடரொளி கணபதி ரா.காமராஜ் அவர்களின் படத்திறப்பு கோவை அண்ணாமலை அரங்கில் 2.6.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 6மணி அளவில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் தலைமையேற்று காமராஜ் அவர்களின் படத்தை திறந்து வைத்து கூட்டத்திற்கு தலைமை வகித்தார்
தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர் பழ.அன்பரசு, மகளிரணி தோழர் முத்துமணி, சிபிஅய் தோழர் சுகுமார், பக.ஆனந்தராஜ், சகோதரர் வீரசிங்கம், ரூபன் ராஜ் உள்ளிட்டோர் மற்றும் திராவிடர் கழக தோழர்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஆ.பிரபாகரன், மாநகர தலைவர் திக செந்தில்நாதன், மாவட்ட துணை தலைவர் மு.தமிழ்ச்செல்வம், தேவி காமராஜ், மகளிரணி கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழக சொற்பொழிவாளர் புலியகுளம் க.வீரமணி இரங்கல் உரை நிகழ்த்தினார்.
திராவிடர் கழக போராட்டம் என்றாலும், ஆர்ப்பாட்டம் என்றாலும், முன்னணி வீரராக வந்து ஆர்வத்துடன் பங்கேற்றவர் கணபதி காமராஜ், நமது பொதுக்கூட்டம் மற்றும் கலந்துரையாடல் கூட்டங்கள் அனைத்திலும் கலந்து கொண்டவர்.
அதோடு கணபதி பகுதியில் பல பிரச்சார கூட்டங்களை எழுச்சியுடன் நடத்திய முன்னனி தோழர் காமராஜ் அவர்கள் அந்த கொள்கை வீரர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருடைய வாழ்விணையர் தேவி, மகன் பிரபாகரன் உள்ளிட்ட குடும்பத்தினர் அந்த கொள்கை வீரனை பாதுகாத்து பராமரித்து வந்தனர். அவர் மறைவு அந்த குடும்பத்திற்கு பேரிழப்பாகும். அவரை போன்ற ஒரு கருப்புச் சட்டை தொண்டரை இழந்தது கணபதி பகுதியில் இயக்கத்திற்கு பெரும் இழப்பாகும். அவர் விட்டுச் சென்ற கொள்கை பணியை அந்த குடும்பத்தினர் தொடர்ந்து செய்ய அவர் விரும்பிய இலட்சியத்தை கடைப்பிடிக்க உறுதி ஏற்போம் என்று கூறி அவரின் மறைவுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம் என்று உரையாற்றினார்.
கூட்டத்தில் மாநில மாணவர் கழக துணை செயலாளர் மு.ராகுலன், தொழிலாளரணி மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட இளைஞரணி தலைவர் இராசி பிரபாகரன், ஆ.ம.லாவண்யா, மாவட்ட மகளிரணி தலைவர் செ.முத்துமணி, மாவட்ட மகளிரணி செயலாளர் ப.கலைச்செல்வி, மகளிர் பாசறை தேவிகா, பீளமேடு பகுதி செயலாளர் எம்.ரமேஸ், சுந்தாராபுரம் பகுதி தலைவர் தெ.குமரேசன், செயலாளர் பா.ஜெயக்குமார், வடவள்ளி பகுதி தலைவர் ஆட்டோ சக்தி, பழனியப்பன், தி.ச.யாழினி, தி.ச.கார்முகிலி, வ.ராஜேஸ்வரி ,நா.குரு, வெற்றிசெல்வன், பெயின்டர் குமார், ஆவின் சுப்பையா, சிவகுமார், இருதயராஜ், லூக்காஸ் பீட்டர், ராசா, பொள்ளாச்சி வீரமலை, நாகராஜ், சிவராஜ், அ.மு.ராஜா, நாகமணி மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிறைவாக காமராஜ் அவர்களின் மகன் கா.பிரபா கரன் படத்திறப்புக்கு வருகை தந்து அனைவருக்கும் நெகிழ்ச்சி யுடன் நன்றி தெரிவித்து உரையாற்றினார்.