சென்னை, நவ. 19- சட்டப் பேரவையில் நேற்று (18.11.2023), 10 சட்ட மசோதாக்களை ஆளுநருக்கு மீண்டும் அனுப்புவது என, முதல மைச்சர் அவர்கள் முன்மொழிந்த தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய போது, உண்மைக்குப் புறம் பான குற்றச்சாட்டினைக் கூறி, பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
அப்போது எழுந்து விளக்க மளித்த அவை முன்னவர் துரை முருகன், “இப்பிரச்சினையில் அ.தி.மு.க. வின் கொள்கை என்ன, இலட்சணம் என்ன என்பதைத் தெரிவித்து விட்டார்கள். பூனைக் குட்டி வெளியே வந்துவிட்டது” என்று குறிப்பிட்டார்.
சட்டப்பேரவையில் இது குறித்து நடைபெற்ற விவாதம் வருமாறு:
எடப்பாடி பழனிசாமி (எதிர்க்கட்சித் தலைவர்)
இந்த அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. அந்த வழக்கில் தீர்ப்பு வருவதற்குமுன் ஏன் இந்தச் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்? அந்த வழக்கி லேயே, நல்ல தீர்ப்பு கிடைத்து விட்டால், நீங்கள் எண்ணியவாறு தீர்ப்பு கிடைக்கப்பெற்றுவிட்டால், இந்தச் சிறப்புக் கூட்டம் கூட்டுவ தற்கு அவசியம் இல்லாமல் போயி ருக்கும். அவசர அவசரமாக ஏன் இந்தச் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, இந்தச் சட்ட முன்வடிவு களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்பது குறித்து மக்களிடம் சந்தேகம் ஏற்படுகிறது.
அவை முன்னவர் துரைமுருகன்
இதில் ஒரு சின்ன பிரச்சினை. தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு சரியில்லை; satisfaction இல்லை; திருப்திகரமாக இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் சொன்னோம். அவ்வாறு சொன்னவுடனேயே, அதுவரையிலும் மாதக் கணக்கில் நிலுவையில் வைத்திருந்தவர், உட னேயே அவற்றை அனுப்பி விட்டார்.
அந்தக் கோப்புகளை பேரவைத் தலைவருக்கு அனுப்பிவிட்டார். தற்போது கோப்புகளை திருப்பி அனுப்பிவிட்ட நிலையில், 20.11.2023 அன்று வழக்கு விசாரணைக்கு வரும்.
அப்போது என்ன சொல்வார் என்றால், நான் கோப்புகளை திருப்பி அனுப்பிவிட்டேன் என்று சொல்லிவிடுவார். கோப்புகளை அனுப்பிவிட்டார்போலும் என்று உச்ச நீதிமன்றமும் நினைக்கக்கூடும். மறுபடியும் அந்தக் கோப்புகள் போகாது. அதனால்தான், சட் டத்தை மிகவும் clear cut ஆகவே சொல்கிறேன்.
The Governor may give assent to the Bill; ஏற்பிசைவு கொடுக்க வேண்டுமென்று சொல்லப்பட் டுள்ளது. The Governor may give assent to the bill or withhold the bill or return the bill to the Legislature with his message or send the bill for consideration of the President. If the bill is returned to the Legislature – இதைத்தான் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். If the bill is returned to the Legislature with message for reconsideration and if it is passed again with his message or without his message, the Governor thereafter is bound to accord to his assent to the bill.
அதாவது, அவர் திருப்பி அனுப்பும்போது, அதில் ஏதேனும் யோசனை சொல்லியிருந்தாலோ அல்லது சொல்லாமல் அனுப்பியிருந்தாலோ, இந்த மன்றம் அந்த யோசனையை ஏற்றுக்கொள்ள லாம்; ஏற்றுக்கொள்ளாமல் பழைய மாதிரியே அனுப்பலாம்; அப்படி அனுப்பினால், அவர் நிச்சயமாக அதற்கு ணீssமீஸீt கொடுத்தே ஆக வேண்டும்.
ஆகவே, தற்போது வலையில் சிக்கிவிட்டார். எனவே, நாங்கள் திருப்பி அனுப்பிவிட்டோம் என்று நாளைக்கு உச்ச நீதிமன்றத்தில் சொல்ல முடியாது.
எனவே, அடுத்து வழக்கு விசார ணைக்கு வருவதற்கு முன்பாகவே, நாம் நிறைவேற்றிய இந்தச் சட்ட முன்வடிவுகள் ஆளுநர் மாளி கையில் இருக்கும். அவற்றில் கையெழுத்திட்ட பிறகே அவர் டில்லிக்குச் செல்ல வேண்டும்.
தனித் தீர்மானம் ஏற்கெனவே கொண்டு வந்து, அதிலே அவர்க ளுடைய கருத்துகளையெல்லாம் பேசிவிட்டார்கள்.
இப்போது அந்த 10 மசோதாக் கள் ஆளுநர் அவர்களால் திருப்பி அனுப்பப்பட்டதை நாம் இதே அவையில் வைத்து மீண்டும் நம் முடைய ஆளுநர் அவர்களுக்கு அனுப்புகின்றோம். இதில் அந்தக் குற்றச்சாட்டைச் சொல்ல வேண் டிய அவசியமில்லை.
எதற்காக எதிர்க்கட்சித் தலை வர் அந்த நிலைப்பாட்டை எடுத் தார் என்று எனக்குத் தெரிய வில்லை. அதுவும், அம்மையார் ஜெயலலிதா பெயர் கொண்ட பல்கலைக்கழகத்தினுடையது என்று சொன்னார்கள். நிச்சயமாக அந்தப் பெயருக்கு இன்னும் ஆளு நர் அனுமதி தரவில்லை. இன்னும் நிலுவையில் இருக்கின்ற 10 மசோ தாக்களில் இதுவும் ஒன்றாகத்தான் இருக்கின்றது. இதை இன்றைய ஆட்சியில் இருக்கின்றவர்கள்.(குறுக்கீடு)
எடப்பாடி பழனிச்சாமி
“நாங்கள் வெளிநடப்புச் செய்கி றோம்” என்று கூறி, பேரவையில் இருந்து வெளியேறினர்.
அவை முன்னவர் துரைமுருகன்
எதிர்க்கட்சி தலைவர் அவர் கள், அம்மையார் ஜெயலலிதா பெயர் என்று ஓர் உண்மைக்கு மாறான செய்தியை இங்கு சொல்லி விட்டு, வெளிநடப்பு செய்திருக் கிறார்கள். வெளிநடப்பு செய்ததன் நோக்கம், அந்த அம்மையாருடைய பெயரால் என்பதல்ல; பெயரை எடுக்காமலேயே அப்படி சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இவர்கள் பா.ஜ.க.விலிருந்து வெளியே வந்து விட்டாலும், அவர்களுக்கு உள் ளூர ஒரு நீரோட்டம் இருக்கிறது.
ஆகையினால், ஆளுநரை எதிர்த்தால், அது மோடியை எதிர்த் ததுபோல் ஆகும். பா.ஜ.க.வை எதிர்த்ததுபோல் ஆகும். எனவே, இல்லாத காரணத்தை சொல்லி விட்டு, வெளியே போயிருக்கி றார்கள். கிராமத்தில் சொல்வார் கள்; ‘பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது’ என்று, அ.தி.மு.க.- வினுடைய கொள்கை என்ன, இலட்சணம் என்ன என்பதைத் தெரிவித்துவிட்டார்கள்.
அமைச்சர் முனைவர் க. பொன்முடி
எதிர்க்கட்சித் தலைவர் அவர் கள் பெயரை எடுத்துவிட்டதாக சொன்னார். தலைவர் கலைஞர் அவர்களுடைய ஆட்சியில்தான், மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டது.
அந்தப் பெயர்சூட்டி, திறந்து வைத்தவரே கலைஞர் அவர்கள் தான் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இவ்வாறு பேரவையில் விவாதம் நடைபெற்றது.