சென்னை, ஜூன் 5- டாடா நிறுவனம் தமிழ்நாட்டை அதன் மின்சார கார்கள் மற்றும் மற்ற உயர் ரக கார்களின் தலைமையிடமாக மாற்ற முடிவு செய்துள்ளது. அதாவது லேண்ட் ரோவர், ஜாகுவார் போன்ற உயர் ரக கார்கள் மற்றும் மின்சார கார்களை மொத்தமாக இனி தமிழ்நாட்டில் மட்டும் தயாரிக்க முடிவு செய்துள்ளது டாடா நிறுவனம்.
தமிழ்நாட்டில் ராணிப்பேட்டையில் இந்த வாரம் முதல் லேண்ட் ரோவர், ஜாகுவார் கார்களை உற்பத்தி செய்ய உள்ளனர். இதற்கான மிகப் பெரிய முதலீட்டை கடந்த மாதம் உறுதி செய்த டாடா நிறுவனம் அமையப் போகும் புதிய தொழிற்சாலையில் ஜாகு வார் மற்றும் லேண்ட் ரோவர்களை உற்பத்தி செய்ய உள்ளதாக அறிவித்து அதற்கான பணிகளில் இறங்கி உள்ளது.
தூத்துக்குடியில் கடந்த மாதம் முதல் வின்பாஸ்ட் தொழிற்சாலையின் கட்டுமானம் நடந்து வருகிறது தூத்துக்குடி கொஞ்சம் கொஞ்சமாக முதலீட்டாளர்கள் கவ னத்தை ஈர்க்க தொடங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடி யாக தூத்துக்குடி தொழிற் சாலைகளின் கிளஸ்டராக மாற தொடங்கி உள்ளது. அதன்படி தூத்துக்குடியில் பின்வரும் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ACME – 52,000 கோடி
பெட்ரோனாஸ் – 34,000 கோடி
செம்பிகார்ப் (இன்று) – 36,238 கோடிகள்
லீப் கிரீன் எனர்ஜி (இன்று)- 22,842 கோடிகள்
என்டிபிசி ஆகியவை முதலீடு செய்துள்ளனர். ஒன்றிய அரசு ஏற்கெனவே வ.உ.சிதம்பரனார் துறை முகத்தை ஹைட்ரஜன் சேமிப்பு மய்யமாக அறிவித்துள்ளது.
வின்பாஸ்ட்:
சென்னைக்கு வர இருந்த வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடிக்கு செல்ல முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு அரசின் தொடர் பேச்சுவார்த்தை காரணமாக இந்த முடிவை வின்பாஸ்ட் நிறுவனம் எடுத்துள்ளதாம்.
டெஸ்லாவிற்கு போட்டியாக இருக்கும் வின்பாஸ்ட் நிறுவனம்தான் தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக செய்திகள் வரு கின்றன. வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் என்பது வியட்நாமை தளமாகக் கொண்ட ஒரு வாகன நிறுவனமாகும் இது வியட்நாமின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்றாகும்.
தூத்துக்குடியில் திங்கள் முதல் வின்பாஸ்ட் தொழிற்சாலையின் கட்டுமானம் தொடங்க உள்ளது. இந்த இடத்திற்கு அருகிலேயே தூத்துக்குடி சிப்காட்டில் அமையும் பன்னாட்டு பர்னிச்சர் பார்க் அமைக்கப்பட உள்ளது.
இப்போது இ-வாக னங்கள் தயாரிப்பில் முன்னிலையில் இருக்கிறது. மின்சார கார்கள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்கள் போன்ற மின்சார வாக னங்களை (EV) தயாரிப்பதில் விரிவடையும் முதல் கார் பிராண்டாகும்.
உலகின் முதல் தர பிராண்ட் இதுதான். இந்த நிறுவனம்தான் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது. அதுவும் தூத்துக்குடிக்கு தேடி வந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் குழுமம் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கன உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை யில் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 13.3.2024 அன்று முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5.000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசிற்கும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.