* தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளிலிருந்து இம்மியளவும் மாறாமல், தன் குடும்பத்தினர் அனைவரையும் தடம் மாறாமல் நடைபோட வைத்து தாம் வாழ்ந்த காலம் வரை கட்டுப்பாட்டுடன் கழகத்திற்காக தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட பெரியார் பேருரையாளர் பகுத்தறிவுப் பேராசிரியர் இறையனார் அவர்களின் 94ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (4.6.2024) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு 1000 ரூபாயை பசும்பொன் – இசையின்பன் வழங்கினர்.
* நாகர்கோவில் மாநகர கழக தலைவர் ச.ச. கருணாநிதி கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை ஆகியோருடைய தந்தை பெரியார் பெருந்தொண்டர் வே.பி.வே.சண்முகம் அவர்களின் பிறந்த நாள் (சூன் 3) நினைவாக விடுதலை வளர்ச்சிக்காக சந்தா தொகைரூ. 1,000 குமரி மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் மூலம் ச.ச. மணிமேகலை வழங்கினார்.