விடுதலை நாளிதழின் 90 ஆம் ஆண்டு தொடக்க விழா (1.6.2024) சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது! இந்நிகழ்வில் திருச்சி, துறையூரைச் சேர்ந்த மாலினி – சண்முகம் இணையர்கள் தம் குழந்தைக்குப் பெயர் வைக்க அழைத்து வந்திருந்தனர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் “டார்வின் பெரியார்” எனப் பெயரிட்டார். பிறந்து 40 நாட்களே ஆன நிலையிலும், கருப்புச் சட்டை அணிந்து வந்த அந்தக் குழந்தை, பார்ப்போரின் கவனத்தை ஈர்த்தது!