30-8-2023 அன்று காலை 10.00 மணிக்கு சென்னை பல்லவன் சாலையிலுள்ள தொ.மு.ச உடனான கூட்டுக் குழுவின் கலந்துரையாடல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 11.00 மணிக்கு பல்லவன் சாலை மாநகர் போக்குவரத்துக் கழக கலந்தாய்வு அரங்கில் போக்குவரத்து துறை அமைச்சர் முன்னிலையில் அனைத்து நிர்வாக இயக்குநர்கள் கூட்டுக் குழுவின் சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டு போக்குவரத்துக் கழக நிர்வாகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட மாதிரி பொது நிலையாணை நகல் பற்றி விவாதிக்கப்பட்டது அதில் ஒரு சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்பதை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி நிர்வாகங்களும் ஏற்றுக் கொண்டு சிறிது கால அவகாசம் எடுத்து திருத்தங்களை தொழிற்சங்கங்கள் தருவ தாகவும், திருந்தங்களை நிர்வாகம் ஏற்றுக் கொள்வதாகவும் முடிவு செய்யப் பட்டது. இதில் திராவிட தொழிலாளர் பேரவை யின் சார்பில் பேரவை தலைவர் கருப்பட்டி கா. சிவா என்ற சிவகுருநாதன் கலந்து கொண்டார்.
போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களின் கலந்துரையாடலில் தொழிலாளர் கழகம் பங்கேற்பு
Leave a Comment