சென்னை, ஜூன் 3- முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கலைஞரின் 101ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (3.6.2024) காலை 10 மணியளவில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவித்து, சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைக் கழக அமைப்பாளர் பொன்னேரி பன்னீர் செல்வம், கொடுங்கையூர் கோபால், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வெங்கடேசன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு மற்றும் சி.வெற்றிச் செல்வி, பசும்பொன், மரகதமணி, தங்க.தனலட்சுமி, க.அன்புமணி, தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தையன், குணசேகரன், பழனிசாமி, வெற்றிச் செல்வன், ஆவடி தமிழ்செல்வன், மோகன்ராஜ், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மயிலை சேதுராமன், சண்முகபிரியன், கரு.அண்ணாமலை, அரும்பாக்கம் தாமோதரன், உடுமலை வடிவேல், பர்தின், கலையரசன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை அன்புசெல்வன், எண்ணூர் மோகன், ஜெ.ஏ.ஜனார்த்தனன், மற்றும் திரளான கழகத் தோழர்கள் – தோழியர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.