தஞ்சை, செப். 1- அக்டோபர்-6இல் தஞ்சையில் நடைபெறும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா குறித்து –
தஞ்சை மாவட்டம் முழுவதும் சுவரெழுத்து பிரச்சாரம் மற்றும் களப்பணியில் இளைஞரணி தோழர்கள் முழு வீச்சுடன் ஈடுபடுவதென தஞ்சை மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
30.8.2023 அன்று மாலை 6:30 மணி அளவில் தஞ்சாவூர், மாதாக்கோட்டை சாலை ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம் அன்னை மணிம்மையார் அரங்கில் தஞ்சை மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் ரெ.சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிக்குமார் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினார்.
மாவட்ட கழக காப்பாளர் மு.அய்யனார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் அ.டேவிட், மாநில இளைஞரணி துணை செயலாளர் முனைவர் வே.இராஜவேல் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினார்.
மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் தலைமையேற்று உரையாற்றினார். தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.குணசேகரன், இரா.ஜெயக் குமார் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
இக்கூட்டத்தில் மாநில ப.க. ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, மாநில ப.க. துணை தலைவர் கோபு.பழனிவேல், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரப்பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் அ..உத்திராபதி, பெரியார் சமூக காப்பணி இயக்குநர் தே.பொய்யாமொழி, தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், அம்மா பேட்டை ஒன்றிய தலைவர் கி.ஜவகர், தஞ்சை மாநகர துணைத் தலைவர் செ.தமிழ்செல்வன், தஞ்சை மருத்துவக் கல்லூரி பகுதி செயலாளர் ப.விஜயகுமார், திருவோணம் ஒன்றிய ப.க. அமைப்பாளர் சி.நாகநாதன், மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர் இர.மணிகண்டன், தஞ்சை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் க.மணிகண்டன், உரத்தநாடு நகர இளைஞரணி செயலாளர் ச.பிரபாகரன், செந்தலை கலையரசன், உரத்தநாடு நகரத் தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன், தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் இர.மகேந்திரன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் அ.சுப்பிரமணியன், ஊரச்சி திருநாவுக்கரசு, அதிசயா, சாலியமங்கலம் வை.ராஜேந்திரன், உரத்தநாடு ஒன்றிய துணைத் தலைவர் இரா.துரைராசு, பெரியார் படிப்பக உறுப்பினர் ஏ.வி.என்.குணசேகரன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் ஆ.லட்சுமணன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ச.அழகிரி, ஜெகதாப்பட்டினம் யோவான்குமார், சூரக்கோட்டை பாரதிதேவா, ஒன்றிய இளைஞரணி தலைவர் ஆ.பிரகாஷ், மாநகர இளைஞரணி துணை தலைவர் அ.பெரியார் செல்வம், தஞ்சை மாநகர ப.க.செயலாளர் இரா.வீரக்குமார், உரத்தநாடு நகர இளை ஞரணி தலைவர் பேபி ரெ.ரமேஷ், மாணவர் கழக தோழர் பொ.இ.தமிழிசை, மற்றும் கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்
திருவையாறு ஒன்றிய இளைஞரணி தலைவர் மோகன் ராஜ் நன்றி உரையாற்றினார்
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
குடந்தை மாநகர திராவிடர் கழக தலைவர் மானமிகு கவுதமன் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்தநாளான செப்டம்பர் 17 – திராவிடர்களின் தேசிய திருவிழாவாக கொண்டாடும் வகையில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்குவது, தஞ்சை மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் கழகத் தோழர்களின் இல்லங்களிலும் கழக லட்சிய கொடியை ஏற்றுவது, பெரியார் பட ஊர்வலங்களை நடத்துவது, ஒலிபெருக்கி வைத்து இயக்கப் பாடல்களை இசைக்கச் செய்வது, சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகளை நடுவது மற்றும் தெருமுனை கூட்டங்கள் பொதுக்கூட்டங்களை தஞ்சை மாவட்டம் முழுவதும் நடத்தி பெரியார் பிறந்த நாள் விழாவினை எழுச்சியோடு கொண்டாடுவது எனவும்,
திராவிடர் கழகமாம் தாய் கழகத்தின் சார்பில் 2023 அக்டோபர் 6 அன்று தஞ்சாவூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் நடைபெறும் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு விழாவிற்கு தஞ்சை மாவட்ட இளைஞரணி சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்குவது எனவும், மாவட்டம் முழுவதும் சுவரெழுத்து விளம்பரம் செய்வது களப்பணிகளில் ஈடுபடுவது எனவும்,
தஞ்சை ந.பூபதி நினைவு பெரியார் படிப்பக வாசகர் வட்ட மாதாந்திர தொடர் கூட்டத்தினை இளைஞரணி சார்பில் தொடர்ந்து நடத்துவது எனவும்,
தந்தை பெரியார் 145ஆவது பிறந்தநாள் விழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனைக் கூட்டங்களை தஞ்சை மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் இளைஞரணி சார்பில் நடத்துவது எனவும்,
தமிழ்நாடு அரசின் 2023 ஆண்டிற்கான தகைசால் தமிழர் விருது பெற்றுள்ள திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்களையும், தமிழ்நாடு அரசின் சார்பில் விருது வழங்கி சிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியினையும் இக்கூட்டம் தெரிவித்துக்கொள்வது எனவும்,
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங் களிலும் இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி புதிய உறுப்பினர்களை சேர்த்து அமைப்பை வலுப்படுத்துவது எனவும் முடிவு செய்யப்படுகிறது.
புதிய உறுப்பினர்கள்
தஞ்சாவூர் மாவட்டம்
மாவட்ட இளைஞரணி தலைவர் ரெ.சுப்பிரமணியன் (கருவிழிக்காடு)
மாவட்ட இளைஞரணி செயலாளர் பேபி ரெ.ரமேஷ் (உரத்தநாடு)
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இர.மணிகண் டன்(மணத்திடல்)
மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அ.சுப்பிரமணியன் (தெற்கு நத்தம்)
மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் ஆ.பிரகாஷ் (தாழம்பட்டி)
தஞ்சை ஒன்றியம்
ஒன்றிய இளைஞரணி தலைவர் க.மணிகண்டன் (கோபால் நகர்).
ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆ.ரமேஷ் (அரும்பலை).
தஞ்சை மாநகரம்
மாநகர இளைஞரணி தலைவர் அ.மதன்ராஜ் (சீனிவாச புரம்)
மாநகர இளைஞரணி செயலாளர் மா.இராஜராஜன் (தொல்காப்பியர் சதுக்கம்)
மாநகர இளைஞரணி அமைப்பாளர் இரா.திலீபன் (இ.பி.காலனி)
மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார்செல்வம் (கீழ் அலங்கம்)
உரத்தநாடு ஒன்றியம்
ஒன்றிய இளைஞரணி தலைவர் நா.அன்பரசு (துறை யுண்டார் கோட்டை)
ஒன்றிய இளைஞரணி செயலாளர் சு.குமரவேல் (தெற்கு நத்தம்)
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வெ.நா.கிட்டு (சடையார் கோவில்)
ஒன்றிய இளைஞரணி துணைத் தலைவர் ரெ.சதிஷ் (கோவிலூர்)
உரத்தநாடு நகரம்
நகர இளைஞரணி தலைவர் ச.பிரபாகரன்
நகர இளைஞரணி செயலாளர் இரா.பெரியார் எழிலன்
நகர இளைஞரணி அமைப்பாளர் மா.சக்ரடீஸ்
நகர இளைஞரணி துணைத் தலைவர் கே.எஸ்.பி.சக்கரவர்த்தி
நகர இளைஞரணி துணை செயலாளர் அ.மாதவன்
திருவையாறு ஒன்றியம்
ஒன்றிய இளைஞரணி தலைவர் தா.மோகன்ராஜ் (கண்டி யூர்)
ஒன்றிய இளைஞரணி செயலாளர் க.கலையரசன் (செந் தலை)
பூதலூர் ஒன்றியம்
ஒன்றிய இளைஞரணி செயலாளர் சி.பிரபு (பழமார்னேரி)
அம்மாப்பேட்டை ஒன்றியம்
ஒன்றிய இளைஞரணி தலைவர் த.பிரபாகரன் (சாலிய மங்கலம்)
ஒன்றிய இளைஞரணி செயலாளர் வெ.தினேஷ்குமார் (சாலியமங்கலம்)
தஞ்சை தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம்
தஞ்சை தெற்கு ஒன்றிய திராவிடர் கழக துணைத் தலைவர் நா.வெங்கடேசன் (பிள்ளையார்பட்டி)
தஞ்சை தெற்கு ஒன்றிய துணை செயலாளர் எஸ்.செந்தில் (வஸ்தாசாவடி)
தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரியின் சகோதரர் ஊரச்சி அ.திருநாவுக்கரசின் மகள் தி.அதிசயா, புதுச்சேரி சிறீலெட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவராக சேர்ந்துள்ளார். அவரை தஞ்சை மாவட்ட அனைத்து நிலை கழக பொறுப்பாளர்கள் முன்னிலையில் மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் பயனாடை அணிவித்துப் பாராட்டினார். புதிதாக பொறுப்பேற்ற தஞ்சை மாவட்ட, ஒன்றிய, நகர இளைஞர் அணி பொறுப்பாளர்களுக்கு பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.