திண்டுக்கல், செப். 1- திண்டுக்கல் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “அறிவியல் மனப்பான்மையை வளர்ப் போம், அறியாமை இருளை நீக்குவோம்“ என்ற கொள்கையை விளக்கி தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 22.08.2023 அன்று மாலை 6:00 மணியள வில் திண்டுக்கல், நாகல் நகர், சிண்டிகேட் வங்கி அருகில் மிகுந்த எழுச்சியுடன் நடை பெற்றது.
கூட்டத்திற்கு திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை செயலாளர் மு.நாகராசன் தலைமை வகித்தார். மாவட்ட ப.க. செயலாளர் தி.க.செல்வம் வரவேற்புரை ஆற்றினார்.
பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனக் குழு உறுப் பினர் மயிலை நா.கிருஷ்ணன், மாவட்ட தலைவர் இரா.வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
மூடநம்பிக்கைகளை விளக்கி, அறிவியல் கருத்துக ளைக் கொண்டு சிந்தித்து செயல்படுவது குறித்த பல்வேறு செய்திகளை எடுத்துக் கூறிக் கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் சிறப்புரை ஆற்றினார். மாநில இளைஞரணி துணைச் செய லாளர் நா.கமல்குமார், மாவட்ட துணைத் தலைவர் பெ.கிருஷ்ணமூர்த்தி, மாநகரத் தலைவர் அ.மாணிக்கம், செய லாளர் த.கருணாநிதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.பாண்டியன், ஒன்றிய செய லாளர் ச.பொன்ராஜ், வேட சந்தூர் இராமகிருஷ்ணன், சிதம்பரம் கிருஷ்ணமூர்த்தி, சின்னப்பர் மற்றும் கழகத் தோழர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மண்டல துணைச் செயலாளர் வ.அன்பரசு, மாநகர் மாவட்ட செயலாளர் மைதீன் பாவா, தொகுதி துணைச் செயலாளர் கு.வெர்னா, 28ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் அ.நடராஜ் உள்ளிட்ட தோழர் களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.இறுதியில் மாவட்ட இணைச் செயலாளர் கே.ஆர்.காஞ்சித்துரை நன்றி கூறினார்.