இஸ்லாமாபாத், ஜூன் 1– பாகிஸ்தான் மேனாள் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி யின் தலைவர் இம்ரான்கான் (வயது 71). இவர் மீது பணமோசடி ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இது தொடர்பாக பல வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே ஒரு ஊழல் வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதனையனையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் 9ஆம் தேதி அன்று பாகிஸ்தான் நாட்டு காவல்துறையினர் இம்ரான்கானை கைது செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடைபெற்ற கலவரத்தில் ராவல்பிண்டியில் ராணுவ தலைமையகம், அருங் காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டன.
இதனால் வன்முறையில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோரை காவல்துறையினர் கைது செய்தனர்.மேலும் இந்த கலவரத்தை தூண்டியதாக இம்ரான்கான் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
போதிய ஆதாரம் இல்லை
இதுதொடர்பான வழக்கு இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை தற்போது முடிவடைந்தது. இதில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை கூறி விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.
அதேசமயம் ஊழல் குற்றச் சாட்டு உறுதியாகி அவர் ஏற்கெனவே அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே, அந்த வழக்குகளில் அவர் தொடர்ந்து சிறைத் தண்டனை அனுபவிப்பார் என்பது குறிப் பிடத்தக்கது.