கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

Viduthalai
1 Min Read

1.6.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* இன்று (1.6.2024) பிற்பகல் 3 மணிக்கு இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. திமுக சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார் என தகவல்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
*சிறப்பு திருமணச் சட்டத்தின்படி நடந்தாலும், ஹிந்து – முஸ்லீம் இடையே நடைபெறும் மத மறுப்பு திருமணம் செல்லாது என ம.பி. நீதிமன்றம் தீர்ப்பு.
*நடிகைக்கு பணம் கொடுத்தது தொடர்பான விவரங்களை முறைகேடாக மறைத்த குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க மேனாள் அதிபர் டிரம்ப் குற்றவாளி என தீர்ப்பு. தண்டனை விவரங்கள் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் வழக்கு விசாரணையின் போது வழங்கப்படும் என்று நியூயார்க் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக இருந்த ஒருவர் மீது குற்றவியல் வழக்கில் தண்டனை பெறுவது வரலாற்றில் இதுவே முதல் முறை.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* குரூப்-IV வேலைகளுக்கு தமிழில் 40 சதவீதம் கட்டாயம் என்ற தமிழ் நாடு அரசின் ஆணை செல்லும். சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு.
* ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பது தனது விருப்பம் என்றும் காங்கிரசுக்கு 128 இடங்கள் கிடைக்கும் என்றும் மல்லிகார்ஜூனா கார்கே நம்பிக்கை.
தி டெலிகிராப்:
* கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள 13 நாடாளுமன்றத் தொகுதிகளில் பலவற்றில் இன்று சனிக்கிழமை வாக்களிக்கும் போது சில “ஆச்சரியங்கள்” நிகழும் என வாக்காளர்கள் பேச்சு. ‘வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதற்காக’ பிரதமர் நரேந்திர மோடி மீது பலர் அதிருப்தியில் உள்ளனர். பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்கு எதுவும் செய்யவில்லை என்று பலர் குற்றம் சாட்டுகின்றனர்

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *