பேராசிரியர் க.அன்பழகன்
தென் இந்தியச் சமுதாயமான திராவிட இனமக்களைப் பீடித்திருந்த அடிமை மனப்பான்மையை அகற்றவும். ஜாதி உணர்வை உதறி எறியவும், மத நம்பிக்கையைத் தகர்க்கவும். கடவுளைப் பற்றிக் கற்பிக்கப்பட்ட புராணப் புளுகுகளை ஒழிக்கவும். அவரவர் உள்ளத்தில் முன்னரே பதிந்த எண்ணத்திலிருந்து மனிதன் சுதந்திரச் சிந்தனை கொள்ளவும். வழிகோலிய ஏடுகளில் எல்லாம் தலைசிறந்த பணியாற்றிய பெருமைக்குரிய ஏடு. பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் எழுத்தாலும், பேச்சாலும் பரப்பப்பட்ட கொள்கை விளக்கங்களைத் தாங்கி வெளிவந்த விடுதலை நாளேடு!
தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் அறிவுச் சுடராக குடிஅரசு பகுத்தறிவு, Rationalist ஆகிய ஏடுகள் கிழமை ஏடு ஆகவும். திங்கள் இருமுறை ஏடாகவும் வெளிவந்து, தமிழ்நாட்டில் ஒரு சிந்தனைப் புரட்சி ஏற்படுத்தியதைத் தொடர்ந்து,விடுதலை நாட்டு நடப்பைப் பற்றிய செய்திகளுடன், வைதிக, பார்ப்பனிய ஆதிக்கத்தினால் வளர்க்கப்பட்ட மவுடீகத்தை, கண்மூடித்தனத்தைத் தெளிவுபடுத்தும் கட்டுரைகளுடன்
வெளியிடப்பட்டு வருவது: அத்திருப்பணி இன்றளவும் தொடருகிறது.
விடுதலை பவழ விழா மலருக்கான
வாழ்த்து செய்தியில்…