‘விடுதலை’ ஏடு செய்திருக்கக் கூடிய சாதனைகளை எடுத்துச் சொன்னார்கள்.நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். இதே தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று அழைக்க வேண்டுமென்று முதன் முதலில் எழுதிக்காட்டியது எந்த ஏடு என்று கேட்டால் விடுதலை என்கிற ஏடுதான் என்பதையும் இங்கே பெருமையோடு நான் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
ஆந்திரா தனி மாநிலமாகப் பிரிந்தபொழுது அந்த நேரத்திலே தமிழ்நாடு என்று அழைக்க வேண்டுமென்று முதன் முதலில் எழுதிக் காட்டிய ஏடுதான் இந்த ‘விடுதலை’ ஏடு.
அதேபோல தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமாக இருக்கக் கூடிய அந்த கோட்டையிலே பொறிக்கப்பட்டிருக்கக் கூடிய ஒரு வாசகம் நம்முடைய தமிழ்நாட்டின் சின்னத்தைப் பதித்து அதிலே எழுதப்பட்டிருக்கக் கூடிய வாசகம் ‘சத்தியமேவ ஜெயதே’ என்ற வடமொழிச் சொல்தான் பொறிக்கப்பட்டிருக்கும்.
அந்தச் சொல்லை மாற்றி ‘வாய்மையே வெல்லும்’ என்று தமிழிலே மொழி பெயர்த்து எழுத வேண்டுமென்று முதலில் எழுதிக்காட்டிய ஏடும் இந்த ‘விடுதலை’ ஏடுதான் என்பதை நான் பெருமையோடு குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
ஈரோட்டில் 25.8.2009 அன்று நடைபெற்ற ‘விடுதலை’ பவள விழாவில்
தமிழ்நாட்டின் அன்றைய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்
ஆற்றிய உரையிலிருந்து…