நான் இந்த மாமன்றத்திலே காணுகின்றேன். நண்பர் மாதவனிடத்திலே பேசிக்கொண்டிருக்கும் போதுகூடச் சொன்னேன். எந்தெந்த இடங்களில் – எந்தெந்த உருவங்களில் பெரியார் இங்கு அமர்ந்திருக்கின்றார் என்பதை மன்றத்தில் என் விழிகளை மேயவிட்டுப் பார்த்ததில் புரிந்து கொள்ள முடிகிறது. அப்படி பெரியார் வியாபித்திருக்கிறார். எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறார். அந்தப் பெருமகன் ஒரு பத்திரிகையை நடத்த வேண்டும், கருத்துகள் பரவிட வேண்டும். என்று நினைக்கிறார் என்றால், ‘‘பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற லாப நோக்கத்தோடு அல்ல; என்னுடைய பத்திரிகை அதிக எண்ணிக்கையில் விற்பனையாக வேண்டும் என்பதல்ல.
அது போய்ச்சேர வேண்டிய இடத்திலே, அதிலே சொல்லப்படுகிற கருத்துகள் போய்ச்சேர்ந்தால் போதும்’’ என்று ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்கள்.
அவர்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், ‘விடுதலை’யிலே வருகிற கருத்துகள் போய்ச்சேர வேண்டிய இடத்திலே போய்ச் சேர்ந்து கொண்டிருக்கின்றன. அதை யாரும் மறுப்பதற்கில்லை.”
‘விடுதலை’ அச்சகத்தில் புதிய அச்சு இயந்திரத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்வில் ஆற்றிய உரையிலிருந்து… “விடுதலை” 4-11-1969