காங்கிரஸ் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட துணைத் தலைவர் மருத்துவர் முகமது (மைஜா கல்வி அறக்கட்டளை நிறுவனர்) அவர்கள் 5ஆண்டு விடுதலை சந்தாவிற்கான நன்கொடை ரூ.10,000த்தை ஓசூர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தனிடம் வழங்கினார். காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் எஸ்.ஏ.முரளிதரன் உடன் இருந்தார்.
கும்பகோணம் கழக மாவட்டம், திருவிடைமருதூர் ஒன்றிய துணைத் தலைவர், திருநாகேஸ்வரம், சன்னாபுரம் ஆசைமணி ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000, கும்பகோணம் கழக மாவட்டம், திருவிடைமருதூர் ஒன்றியம், திருநாகேஸ்வரம், தி.க.விஜயகுமார் 10 ஆண்டு விடுதலை சந்தா தொகை ரூ. 20,000 மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், தலைமை கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி, மாவட்டத்தலைவர் கு.நிம்மதி, திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் எம். என்.கணேசன், மாவட்ட தொழிலாளர் அணி துணைச் செயலாளர் சிவக்குமார், தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் வழங்கினர் (28-05-2024).